முகப் பராமரிப்புக்கு செலுத்தப்படும் அதே கவனம் கழுத்திற்கும் தேவை

உட­லின் மற்ற பகு­தி­க­ளை­விட கழுத்து வேக­மாக மூப்­ப­டை­வது சில­ருக்­குக் கவலை தரு­வது உண்டு.

கழுத்­துத் தோல் வேக­மாக மூப்­ப­டை­யும் தன்மை உடை­யது என்று கலி­ஃபோர்­னியா, சான் ஃபிரான்­சிஸ்கோ பல்­க­லைக்­க­ழக தோலி­யல் பிரி­வைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் தியோ­டொரா மவ்ரோ கூறி­னார்.

கழுத்­துத் தோல் எளி­தில் பாதிப்­ப­டை­யும் தன்மை உடை­யது என்­றார் அவர். நிமிர்ந்து உட்­கா­ரா­தது அல்­லது நிற்­கா­தது, போது­மான அளவு சரு­மப் பரா­ம­ரிப்பை மேற்­கொள்­ளா­தது, கழுத்­துத் தோலில் அதிக நேரம் சூரிய ஒளி படுவது, இயல்­பா­கவே தோல் தொய்­வ­டை­வது, கழுத்­துத் தசை­கள் வலு­வி­ழப்­பது போன்­ற­வற்­றால் கழுத்­துத் தோல் வேக­மாக மூப்­ப­டை­கிறது.

உட­லின் மற்ற பகு­தி­களில் உள்ள தோல் குண­ம­டை­யும் அள­வுக்கு கழுத்­துத் தோல் குண­ம் அடை­வ­தில்லை. ஏனெ­னில், கழுத்­துத் தோல் அவ்­வ­ளவு உறுதி­யா­னது இல்லை என்­றும் அதில் குறை­வான மூல உயி­ர் அணுக்­கள் இருப்­ப­தா­க­வும் தோல் அறுவை சிகிச்சை நிபு­ணர் டாக்டர் கேட்டி கிவன் கூறி­னார்.

கழுத்­துத் தோல் மூப்­ப­டை­தலை மெது­வ­டை­யச் செய்ய, வரு­முன் காப்­பதே சாலச் சிறந்­தது என்கிறார் இவர்.

சூரிய வெளிச்சத்தில் இருந்து கழுத்துக்குப் பாதுகாப்பு தேவை

“உங்­கள் கழுத்­தின் எதிரி சூரி­யன்,” என்று டாக்­டர் மவ்ரோ குறிப்­பிட்­டார்.

கழுத்­துத் தோல் மூப்­ப­டை­தலுக்­கான பல அறி­கு­றி­க­ளை­யும் சூரிய வெளிச்­சத்­து­டன் தொடர்பு­ப­டுத்­த­லாம்.

கழுத்­துத் தோல்­மீது சூரிய ஒளி படும்­போது, புற ஊதாக்­கதிர் தோலின் உள்­ப­கு­தி­யைச் சென்­ற­டை­கிறது. இத­னால் ‘கொலா­ஜன்’, ‘இலாஸ்­டின்’ இவ்வி­ரண்­டை­யும் தயா­ரிக்­கும் உயி­ர­ணுக்­கள் சேத­ம­டை­கின்­றன.

தோல் அமைப்பை கட்­டுக்­கோப்­பு­டன் வைத்­தி­ருக்க ‘கொலா­ஜன்’, ‘இலாஸ்­டின்’ புர­தங்­கள் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக யூசி டேவிஸ் மருத்­துவ நிலை­யத்­தின் தோலி­யல் பிரி­வைச் சேர்ந்த டாக்டர் உமா அக்­பாய் கூறி­னார்.

“தோலின் இறுக்­கத்­தைக் கட்­டிக்­காக்க ‘கொலா­ஜன்’ உத­வு­கிறது. தோல் இழுக்­கப்­பட்ட பிறகு அதன் அசல் வடி­வத்­துக்­குத் திரும்ப ‘இலாஸ்­டின்’ உத­வு­கிறது,” என்­றார் அவர்.

இவ்­விரு புர­தங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் தோலின் உட்­புறம், முகம், மேற்கை போன்ற உட­லின் மற்ற பகு­தி­யை­விட கழுத்­தில் மெல்­லி­ய­தாக உள்­ள­தாக அவர் விவ­ரித்­தார்.

சூரிய வெளிச்­சத்­தில் நீண்­ட­நே­ரம் நிற்­கும்­போது தோலில் சுருக்­கம் ஏற்­ப­டு­வ­தோடு தோல் நிறம் கறுப்பாகலாம் என்­றும் டாக்டர் அக்­பாய் குறிப்­பிட்­டார்.

கழுத்­தில் ‘சன்ஸ்­கி­ரீன்’ தடவ மக்­கள் மறந்­து­வி­டு­வது உண்டு என்று கூறிய டாக்­டர் மவ்ரோ, உட­லின் மற்ற பகு­தி­க­ளைப் பாது­காக்க வேண்­டி­யது எவ்­வ­ளவு முக்­கி­யமோ, கழுத்­தை­யும் பாது­காப்­பது அதே அளவு முக்­கி­யம் என வலி­யு­றுத்­தி­னார்.

குறைந்­தது எஸ்­பி­எஃப் 30 உடைய சன்ஸ்­கி­ரீனை தின­மும் தட­வு­மாறு அவர் பரிந்­து­ரைத்­தார். கழுத்­தைச் சுற்றி சன்ஸ்­கி­ரீனை தாரா­ள­மாக தடவ வேண்­டும் என்று சொன்ன அவர், வெளி­யிடங்­களில் இருந்­தால் இடை­வெளி­விட்டு நாள் முழு­வ­தும் அதைத் தடவ வேண்­டும் என்­றார்.

முகத்தைப் பராமரிக்கும்

அதே அளவுக்கு கழுத்தையும் பராமரியுங்கள்

‘சீரம்’, ‘லோஷன்’ போன்­ற­வற்றை தவ­றா­மல் தடவி தங்­க­ளது முகத்­தைப் பரா­ம­ரிக்­கும் மக்­கள், கழுத்­தைப் புறக்­க­ணித்து விடு­வ­துண்டு என்று டாக்­டர் அக்பாய் சொன்­னார்.

சரு­மப் பரா­ம­ரிப்­பில் கழுத்­தை­யும் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்ற அவர், முகத்­தில் தட­வும் திர­வத்­தைக் கழுத்­து­வரை தட­வு­மாறு அறி­வு­றுத்­தி­னார்.

வயது ஏறும்­போது, ஈரப்­ப­தத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளும் ஆற்­றலை தோல் சிறிது சிறி­தாக இழந்­து­வி­டு­கிறது என்று டாக்­டர் மவ்ரோ கூறுகிறார். கழுத்­துத் தோல் வறண்­டு­போய், வழ­வ­ழப்பு குறைந்து, மந்­த­மாக காட்­சி­ய­ளிக்­கிறது.

என­வே­தான், காலை­யி­லும் இர­வி­லும் ‘மாய்ஸ்ச்­ச­ரை­சர்’ தடவு­வதை உறு­தி­செய்ய வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார். மது அடங்­கிய சரு­மப் பரா­ம­ரிப்­புப் பொருள்­க­ளைக் கழுத்­தில் தடவு­வ­தைத் தவிர்க்க வேண்­டும். ஏனெ­னில், அவற்­றால் தோல் மேலும் காய்ந்­து­வி­டக்­கூ­டும்.

சவர்க்­கா­ரங்­கள் பல­வற்­றி­லும் ‘சர்­ஃபெக்­டண்ட்’ எனப்­படும் மூலப் பொருள் உள்­ளது. தோலின் நீர்ச்­சத்தை அவை நீக்­கி­வி­டும்.

ஒரு சரு­மப் பராம­ரிப்பு பொரு­ளைப் பயன்­ப­டுத்­திய பிறகு உங்­க­ளது தோல் உலர்ந்து காணப்­பட்­டால், வேறொரு பொரு­ளுக்கு மாற வேண்­டி­ய­தற்­கான அறி­குறி அது.

தோலின் உறு­திப்­பாட்டை மேம்­ப­டுத்த வேண்­டு­மா­னால், ‘ரெட்­டி­னோய்டு’ மூலப் பொரு­ளைக் கொண்ட ‘சீரம்’ அல்­லது ‘லோஷன்’களைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று டாக்­டர் கிவன் பரிந்து­ரைத்­தார். அவற்­றைத் தவ­றாமல் பயன்­ப­டுத்­தி­னால் ‘கொலா­ஜன்’ உற்­பத்­தியை அவை அதி­க­ரிக்க உத­வும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!