'ட்ரைகிளிசரைட்' அளவைக் குறைப்பதற்கான வழிகள்

'ட்ரைகிளிசரைட்' அளவைக் குறைப்பதற்கான வழிகள்

2 mins read

உட­லில் 'ட்ரை­கி­ளி­ச­ரைட்' அளவு அதி­க­மாக இருந்­தால், இதயப் பிரச்­சினை ஏற்­படும் ஆபத்து கூடு­கிறது. சர்க்­கரை, மாவுச்­சத்து, மாறு­பக்க கொழுப்பு (trans fat) அள­வைக் குறைத்துக்­கொண்டு, உடற்­ப­யிற்சி செய்து உணவு முறை­யில் மாற்றங்­களைச் செய்­து­கொண்­டால், ட்ரை­கி­ளி­ச­ரைட் அளவைக் குறைக்க முடியும்.

ரத்­தத்­தில் உள்ள ஒரு­வகை கொழுப்பே ட்ரை­கி­ளி­ச­ரைட்ஸ் எனப்­ப­டு­கிறது. உணவு சாப்­பிட்ட பிறகு, உட­லுக்­குத் தேவை­யில்­லாத கேலரி­கள் 'ட்ரை­கிளி­சரைட்'களாக மாற்­றப்­ப­டு­கின்­றன. அவை கொழுப்பு உயி­ர் அணுக்­களில் சேக­ரிக்­கப்­பட்டு, பின்­னர் தேவைப்­ப­டும்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

உடற்­ப­ரு­மன் பிரச்­சினை, கட்டுப்­ப­டுத்­தாத நீரி­ழிவு, மது­பானம் அருந்­து­வதை வழக்­க­மாக்­கிக்­கொள்­வது, அதிக கேலரிகள் நிறைந்த உண­வு­வகைகளைச் சாப்­பிடு­வது போன்­ற­வற்­றால் ரத்­தத்­தில் ட்ரை­கி­ளி­ச­ரைட் அளவு அதி­க­ரிக்­கிறது.

உண­வு­முறை, வாழ்க்­கை­முறை மாற்­றங்­க­ளால் ட்ரை­கிளி­ச­ரைட் அள­வைக் குறைக்க முடி­யும்.

கேலரிகள் அள­வாக உள்ள உண­வைச் சாப்­பி­டு­வ­தால் உடற்­ப­ரு­மன் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க முடி­யும். ரத்­தத்­தில் உள்ள ட்ரை­கி­ளி­சரைட் அள­வும் கூடா­மல் பார்த்துக்­கொள்­ள­லாம்.

சொல்­லப்போனால், உடல் எடையை 5 முதல் 10 விழுக்­காடு குறைப்­ப­தன் மூலம் ட்ரை­கி­ளி­ச­ரைட் அள­வும் கணி­ச­மாகக் குறை­வ­தாக ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன.

மக்­க­ளின் உண­வு­ மு­றை­யில் கூடு­தல் சர்க்­கரை பெரும் பங்கு வகிக்­கிறது. மிட்­டாய்­கள், குளிர்­பா­னங்­கள், பழச்­சா­று­களில் கூடு­தல் சர்க்­கரை பொது­வாக சேர்க்­கப்­ப­டு­கிறது.

கூடு­தல் சர்க்­கரை 'ட்ரை­கிளி­ச­ரைட்'களாக மாற்­றப்­ப­ட­லாம். இத­னால் ரத்­தத்­தில் ட்ரை­கி­ளி­ச­ரைட் அளவு கூடி, இத­யப் பிரச்­சினை ஆபத்­தும் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

கூடு­தல் சர்க்­க­ரை­யைப் போலவே உண­வில் மாவுச்­சத்­தின் மூலம் கிடைக்­கும் கூடு­தல் கேலரி­கள் 'ட்ரை­கி­ளி­சரைட்'களாக மாற்­றப்­ப­டு­கின்றன.

மாவுச்­சத்து குறைந்த உண­வு­ வகைகளுக்கும் ரத்­தத்­தில் ட்ரை­கிளி­சரைட் அளவு குறை­வாக இருப்­பதற்­கும் தொடர்­புண்டு.

உண­வில் கூடு­தல் நார்ச்­சத்­தைச் சேர்த்­துக்­கொள்­வ­தன் மூலம் சிறு­கு­ட­லில் கொழுப்­பும் சர்க்­க­ரை­யும் ஈர்க்­கப்­ப­டு­வதை மெது­வ­டை­யச் செய்­ய­லாம். இத­னால் ட்ரை­கி­ளி­ச­ரைட் அளவு குறை­கிறது.

உடற்­ப­யிற்சி செய்­வதை வழக்­க­மாக்­கிக்­கொள்­வ­தா­லும் ட்ரை­கி­ளி­ச­ரைட் அளவு குறை­கிறது. குறிப்­பாக, வாரத்­தில் அதிக முறை உடற்­ப­யிற்சி செய்­வ­தால் அதிக பயன் கிடைக்­கிறது.

மாறுபக்க கொழுப்பைக் குறைக்கவும்

உணவு விரை­வில் வீணா­காமல் இருப்­ப­தற்­காக, மாறு­பக்க கொழுப்பு எனும் ஒரு­வகை செயற்­கைக் கொழுப்பு உண­வில் சேர்க்­கப்­ப­டு­கிறது.

பொரித்த உணவு, சுட்ட உண­வுப் பொருள்­களில் மாறு­பக்க கொழுப்பு பொது­வாக இடம்­பெ­று­கிறது. சில விலங்­கு­க­ளி­லும் அது சிறி­த­ளவு கண்­ட­றி­யப்­ப­ட­லாம். உண­வில் மாறு­பக்க கொழுப்பு சேர்க்­கப்­ப­டு­வதற்கு அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வில் தடை விதிக்­கப்­பட்­டது.