தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தமிழ்மொழி விழா 2023 தொடர்பாக திரைப்படப் பாடல்
களின் அழகு பொருளிலா? இசையிலா என்ற தலைப்பில்
பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
முனைவர் நெல்லை சுப்பையா இந்தப் பட்டிமன்றத்தின் நடுவராக இருந்து நிகழ்ச்சியை வழி
நடத்துவார். சிறப்புப் பேச்சாளர்
களாகத் திரைப்பட இயக்குநர், நடிகர் திரு பாண்டியராஜனும் தொகுப்பாளினி, பிக்பாஸ் புகழ் திருமதி அனிதாசம்பத்தும் பங்கேற்கிறார்கள். மற்ற நான்கு பேச்சாளர்களாக சிங்கப்பூர் மாணவர்கள் இருப்பார்கள்.
திரைப்படப் பாடல்களின் அழகு பொருளிலே என்ற அணியை தொகுப்பாளினி திருமதி அனிதா சம்பத் தலைமை ஏற்க ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளி மாணவி அஸ்வின் கணேசன் மற்றும் யூனிடி உயர்நிலைப்பள்ளி மாணவி மகிஷா முத்துக்குமார் ஆகியோரும் வாதிட இருக்கிறார்கள்.
இசையிலே என்ற அணியை நடிகர் திரு பாண்டியராஜன் தலைமை ஏற்க GIIS அனைத்துலக உயர்நிலைப் பள்ளி மாணவி தக்ஷினி முத்துக்குமார் மற்றும் (University of Wollongong) பல்கலைக் கழக மாணவி முத்து சுவேதாவும் வாதிடுகிறார்கள்.
சுவாசூகாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கர்னைன் அப்துல் ரஹீம் சிறப்பு விருந்தினராகச் சிறப்பிக்கிறார்.
இந்நிகழ்ச்சி கியாட்ஹாங் சமூக மன்றம், வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியோரின் ஆதரவில் ஏப்ரல் 29 சனிக்
கிழமை மாலை 6 மணியளவில் கியாட்ஹாங் சமூகமன்றம் தளம் 1ல் நிகழ்ச்சி இடம்பெறவிருக்கிறது.
நுழைவுச்சீட்டுகளை கியட்ஹாங் சமூக மன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் செயலாளர் முனைவர் ராம் 83321430 அல்லது திருமதி நபிலா நஸ்ரின் 90268601 தொடர்புகொள்ளலாம்.

