'உறைய வைக்கப்பட்ட பீன்ஸ்களில் அதிக ஊட்டச்சத்துகள்'

'உறைய வைக்கப்பட்ட பீன்ஸ்களில் அதிக ஊட்டச்சத்துகள்'

1 mins read
d39ff864-676b-4ea7-b66f-ab90ea64bc50
-

புதி­தாக செடி­யில் இருந்து பறிக்­கப்­பட்ட பீன்ஸ் மற்­றும் உறைய வைக்­கப்­பட்ட பீன்ஸ் குறித்­தும் அதி­லுள்ள ஊட்­டச் சத்து குறித்­தும் மருத்­து­வர் ஒரு­வர் பகிர்ந்­துள்­ளார்.

இந்­தி­யா­வின் தெலுங்­கானா பஞ்­சாரா கில்ஸ் பகு­தியைச் சேர்ந்த மருத்­து­வர் சுஷ்மா தி இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் நாளி­த­ழுக்கு கொடுத்த பேட்­டி­யில், "பீன்ஸ் பறிக்­கப்­பட்டு சில நாள்­க­ளுக்­குள் விற்­கப்­ப­டு­கிறது. அப்­போது, சேமிப்பு நேரம் மற்­றும் வெப்­ப­நிலை போன்ற கார­ணி­க­ளால் பறிக்­கப்­பட்ட பீன்­ஸின் ஊட்­டச்­சத்து பாதிக்­கப்­படும்.

"ஆனால் உறைய வைக்­கப்­படும் பீன்ஸ்­கள் பறித்த உட­னேயே உறைய வைக்­கப்­ப­டு­கின்றன. அத­னால் அவற்­றின் ஊட்­டச் சத்­து­களைப் பாது­காக்­க­வும், கெட்­டுப் போவ­தைத் தடுக்­க­வும் முடி­யும்," என்­றார்.

அது­மட்­டு­மன்றி, பல சந்­தர்ப்­பங்­களில், உறைந்த காய்­க­றி­கள் புதி­ய­தை­விட ஆரோக்­கி­ய­மாக இருக்­கும் என்­ப­தை­யும் மருத்­து­வர் சுஷ்மா கூறி­னார்.

பீன்ஸ் சாப்­பிட்டு வந்­தால் அதில் உள்ள ஃப்ளேவோ­னாய்­டு­கள் புற்­று­நோயை உண்­டாக்­கும் செல்­க­ளின் வளர்ச்­சியைத் தடுத்து புற்­று­நோய் வரு­வ­தற்­கான வாய்ப்­பைத் தடுக்­கும்.

ரத்­தம் உறை­யா­மல் பாது­காக்­கும்.

நீரி­ழிவு நோயா­ளி­கள் பீன்ஸை அடிக்­கடி உண­வில் சேர்த்து வந்­தால் நோயி­னால் உண்­டான பாதிப்­பு­கள் குறை­யும்.

எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும். பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.