'இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்-ஓர் அழகியல் பார்வை'

'இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்-ஓர் அழகியல் பார்வை'

1 mins read
e0e50624-7602-4b44-9816-0805ab1c7811
-

தமிழ்மொழி விழாவை ஒட்டி இன்று 'இன்பத் தமிழும் இளைய தலைமுறையும் - ஓர் அழகியல் பார்வை' என்ற நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் இந்திய முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இன்று மாலை நடைபெறும்.

பிரபல பட்டிமன்றப் பேச் சாளரான தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிப் புகழ் திருமதி கவிதா ஜவஹர் பேச உள்ளார்.

இந்திய முஸ்லிம் பேர வையின் இளைஞர் பிரிவினர், முஸ்லிம் லீக் சிங்கப்பூர் அமைப்பின் பேசும் கலை வளர்ப்போம் குழுவைச் சேர்ந்த மாணவர்கள், உள்ளூர் இளம் பேச்சாளர் டாக்டர் முஹம்மது ஷமீர் ஆகியோர் சிறப்பு அங்கங் களைப் படைக்க இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி 6:30 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு நிறைவுபெறும்.