மிஞ்சிய உணவை தவிர்ப்பது நல்லது

மிஞ்சிய உணவை தவிர்ப்பது நல்லது

1 mins read

சில வீடுகளில் குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவாகத்தான் சமைப் பார்கள். சில சமயங்களில் உணவு மிச்சமாகிவிடும். அதனை மறுநாள் சாப்பிடுவோம். இப்படி பழைய உணவைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்கிறது ஆயுர்வேதம். புதிய உணவை சமைத்த 3 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக சேமிக்கப்பட்ட பழைய உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதனால் வயிறு, குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம்.