இம்மாதம் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இடம்பெறும் உலக நோய்த்தடுப்பு வாரத்தை யொட்டி 'சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிக்கு அடுத்த நடவடிக்கை என்ன?' என்ற ஆய்வின் முடிவுகள் இம்மாதம் 25ஆம் தேதி சிறப்பு நிபுணர் குழு கலந்துரையாடலுடன் வெளியிடப்பட்டது.
60 வயதைத் தாண்டியவர்
களில் நீரிழிவு நோயுள்ளோர், இதயம் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட நுரையீரல் நோயுள்ளோரில் 15 விழுக்காட்டினர் மட்டுமே தீவிரமாக நோய்வாய்ப்படும் அளவிற்கு கிருமியின் அச்சுறுத்தல் உள்ளது என்று கருத்துஉரைக்கப்பட்டது.
பாதிக்கப்படக்கூடியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் எதிர்
காலத்தில் பூஸ்டர் தடுப்பூசி
களைப் போட்டுக்கொள்ள போவது இல்லை எனும் முடிவை எடுத்திருப்பதாக ஆய்வு கண்டறிந்தது.
சிறப்பு கலந்துரையாடலில் ஆசிய பசிபிக் நோய்த்தடுப்பு கூட்டணியின் துணைத் தலைவர் முனைவர் டிக்கி பங்கெஸ்டு, உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் பென் இங், சுவாச மருத்துவர் ஆங் சுங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மொடர்னா பையோன்டெக் சிங்கப்பூர் நிறுவனமும் ஆசிய பசிபிக் நோய்த்தடுப்பு கூட்டணியும் இணைந்து நடத்திய யூகோவ் ஆய்வு, சிங்கப்பூரில் பெரும்பாலானோர் கொவிட்-19 இனி ஒரு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று எண்ணுவதாக கண்டறிந்துள்ளது. மூன்று நிறுவனங்களின் ஆய்வின் முடிவுகளை ஆராய்ந்த பின்பு ஒருமித்த அறிக்கையை நிபுணர்கள் அறிவித்தனர்.
"தொடர்ந்து பொதுமக்களிடம் கொவிட்-19 கிருமித்தொற்று பற்றிய விழிப்புணர்வையும் உண்மையான தகவல்களையும் கொண்டு சேர்க்கவேண்டும். கிருமித் தொற்றின் வீரியம் குறைந்து 'என்டமிக்' என்று பெயர் மாற்றம் பெற்றாலும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் பலர் இச்சமூகத்தில் உள்ளனர். சிங்கப்பூரர்கள் கவனமாக இருப்பது நல்லது. மக்கள் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்," என்று மூவரும் தெரிவித்தனர்.
"நீரிழிவு நோயால் சிங்கப்
பூரில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்களே. இதனால் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்ட பின் பிற நோய்களால் எளிதில் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இப்பிரிவினர் அலட்சியமாக இருக்காமல் தக்க நடவடிக்கைகளை எடுத்து உடல் நலத்தைப் பேணுவது சிறந்தது," என்று உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் பென், தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
அனைவரும் சமூக பொறுப்புஉணர்வைக் கடைப்பிடித்து ஒவ்வொருவரையும் குறிப்பாக எளிதில் பாதிப்படையக் கூடியவர்களை இக்காலகட்டத்தில் காப்போம் என்று சிறப்பு கலந்துரையாடல் வலியுறுத்தியது.

