சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் தமிழ்மொழி மாதத்தையொட்டி தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் சிற்றிலக்கியங்களை இம்மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆராய்ந்தது.
ஆண்டுதோறும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் ஏற்பாடு செய்யும் கலைத் திருவிழாவின் ஓர் அங்கமாக இந்தச் சிற்றிலக்கியங்கள் சார்ந்த நடன படைப்பு அமைந்திருந்தது.
நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கலந்துகொண்டார்.
"தமிழில் சிற்றிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை முனைவர் ந.வீ.ஜெயராமன் முன் வைத்த வரையறையை மையமாகக் கொண்டு நடனப் படைப்பில் இடம்பெறும் பாடல்களை நான் தேர்ந்தெடுத்தேன்," என்று பகிர்ந்துகொண்டார் 'சிற்றிலக்கியங்களின் அழகு' நடனப்
படைப்பை ஏற்பாடு செய்த ஆ.மீனலோசனி. இவர் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழக பகுதி நேர பரதநாட்டிய பயிற்றுவிப்பாளர்.
"சிற்றிலக்கியங்கள் மூலம் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழக வரலாற்றையும் தெரிந்துகொள்ளலாம். அக்கால மக்களின் சமூக வாழ்
வியலை அறிவதோடு சிற்றிலக்கியங்கள் அழகியல் தன்மையோடு காணப்படுவதை அறிய முடிகிறது.
"நிகழ்ச்சியில் என்னுடன் ஆடிய கழக மாணவர்களும் கலந்துகொண்ட பார்வையாளர்களும் நமது வரலாறு, புராணக் கதைகள், மக்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள இது சிறந்த வாய்ப்பளித்திருக்கும் என்று நம்பு
கிறேன்," என்று பகிர்ந்துகொண்டார்.
"ஐம்பெரும் காப்பியங்களை என் தமிழ் வகுப்புகள் மூலம் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் சிற்றிலக்கியங்களை அறிமுகப்படுத்தியது இந்தப் படைப்பு. நடனத்தைப் பயிற்சி செய்கையில் சிற்றிலக்கியங்கள் பற்றி பல்வேறு தகவல்களையும் அவற்றில் மறைந்துள்ள அழகையும் தெரிந்துகொண்டேன்," என்று கூறினார் நடனமணி கோபிகா, 21.
நான்மணிமாலை, கலம்பகம், குறவஞ்சி, உலா, அந்தாதி, மீனாட்சி பிள்ளை தமிழ், காவடிச் சிந்து ஆகிய பாடல்களுக்கும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழக நடனமணிகள் நடனமாடினர்.

