நாயகி: பெண்மையின் அழகு

நாயகி: பெண்மையின் அழகு

2 mins read
0e835870-a779-45bb-97a9-531ea38e68cb
-

கண்­ணகி, சீதா, பாஞ்­சாலி,

குந்­தவை, சாவித்திரி போன்ற இலக்­கி­யங்­களில் இடம்பெற்ற பெண்­க­ளின் கதை­களை நாட்­டி­யம் மூலம் மேடை­யேற்­றி­யது 'தத்வா' நடன அமைப்பு.

இம்­மா­தம் 15ஆம் தேதி அன்று நடந்த இந்­நி­கழ்ச்சி தேசிய நூல­கத்­தின் நாடக மையத்­தில் நடந்­தே­றி­யது. தத்வா நடன அமைப்பு பல நட­னக்­கு­ழுக்­களைச் சேர்ந்த நட­ன­

ம­ணி­களை ஒன்று சேர்த்து இந்த படைப்பை மேடை­யேற்­றி­யது.

நாயகி: பெண்­மை­யின் அழகு என்ற பெயர் கொண்ட இந்­நி­கழ்ச்சி ஒரே நாளில் இரண்டு முறை மேடை­யேற்­றப்­பட்­டது. இந்த நடனத்தைக் கண்டு ரசிக்க நூற்­றுக்­க­ணக்­கா­னோர் வருகை புரிந்­த­னர். ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தின் சிர­மங்­கள், கவ­லை­களை அழ­காக நாட்­டி­யம் மூலம் விளக்­கி­னர்.

இந்த நாய­கி­க­ளின் அழகு, வெளித் தோற்­றம் மட்­டு­மின்றி அவர்­க­ளின் சாத­னை­கள், உணர்­வு­கள், அனு­ப­வங்­கள் உள்­ளிட்ட அழகை இந்த நட­னம் வெளி­க்கொ­ணர்ந்­தது.

பாண்­ட­வர்­க­ளின் துணை­வி­யான பாஞ்­சா­லி­யின் தைரி­யம், பலத்தை பெண்­மை­யு­டன் வெளிக்­கொண்­டு­வர நட­ன­மணி வர்ஷா விஸ்­வ­நாத் பல பயிற்­சி­களை மேற்­கொண்­டார்.

"பாஞ்­சா­லியை கதை­கள் மூலம் அறிந்­துள்­ளேன். ஒரு பெண்­ணாக அவ­ருக்கு இருந்த உணர்­வு­களை நானே உள்­வாங்கி நட­னம் ஆடும் வாய்ப்பு எனக்கு கிடைத்­தது," என்­றார் வர்ஷா.

இந்த நிகழ்ச்­சி­யின் கலை வடி­வங்­களை அமைக்­க­வும் வர்­ஷா­விற்கு வாய்ப்பு கொடுக்­கப்­பட்­டது. ஒவ்­வொரு கதா­பாத்­தி­ரத்­தை­யும் எவ்­வ­ளவு காட்­சிப்­பூர்­வ­மாக சித்­திரிக்க முடி­யும் என்­பதை ஆராய்­வ­தற்கு இட­மும் வாய்ப்­பும் அளிக்கப்பட்டதைப் பகிர்ந்­து­கொண்­டார் வர்ஷா.

வேலை, பள்ளி போன்ற பல பொறுப்­பு­கள் கொண்ட பல நட­ன­

ம­ணி­களும் இதற்­கா­கவே நேரம் ஒதுக்கி கலை மீதான நாட்­டத்­தால் ஒன்­றி­ணைந்­ததை பகிர்ந்­து­கொண்­டார் கே வித்­யாஸ்ரீ.

"இளை­யர்­க­ளுக்கு தங்­க­ளின் திற­மை­களை வெளிப்­ப­டுத்த தத்வா தளம் அமைத்துக் கொடுத்தது. தொற்­று­நோய் காலத்­திற்குப் பிறகு, நான் ஆடும் முதல் நிகழ்ச்சி. நேரப் பற்­றாக்­குறை, ஒத்­தி­கை­கள் போன்ற பல சிக்­கல்­க­ளை­யும் தாண்டி இதைப் படைத்­த­தில் மிக்க மகிழ்ச்சி," என்­றார் வித்­யாஸ்ரீ.

இதற்கு முன் தொலைக்­காட்சி, திரைப்­ப­டங்­கள் அல்­லது நூல்­களில் மட்­டும் கண்டு ரசித்த கதாபாத்திரங் களின் வேதனைகளையும் மகிழ்ச்சி யையும் நடனம் மூலம் கண்முன் கொண்டு வந்தது தங்களின் மனத்தைக் கவர்ந்தது என்று பார்வையாளர்கள் கூறினர்.