தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துச்சாமியின் தமிழார்வத்தாலும் சீரிய முயற்சியாலும் சிங்கப்பூரில் 14 தமிழ்ப் பேச்சாளர் மன்றங்கள்
வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
இப்பேச்சாளர் மன்றங்களில் பயிற்சி பெறும் பேச்சாளர்கள் குறித்த நேரத்திற்குள் தாம் சொல்ல வந்த கருத்தை அனைவருக்கும் எளிதில் புரியும்படியும் மனதில் பதியும் வண்ணமும் உரையாற்றுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.
அப்பேச்சாளர்களின் திறமையை மேலும் மெருகேற்றும் வகையில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக ஆண்டுதோறும் தயாரிக்கப்பட்ட மற்றும் அரங்கப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தயாரிக்கப்பட்ட உரைக்கு ஐந்தில் இருந்து ஏழு நிமிடங்களும் அரங்கப் பேச்சுக்கு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்களும் வழங்கப்படும்.
இந்தப் பேச்சுப் போட்டிகள் மன்ற, வட்டார, மாவட்ட அளவில் நடைபெறும். ஒவ்வொரு மன்றப் போட்டிகளின் முடிவில் இரண்டு பிரிவுகளில் முதல் இரண்டு வெற்றியாளர்கள் வட்டார அளவிலான போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மொத்தம் நான்கு வட்டாரங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் இரண்டு வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவர்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாவட்ட அளவிலான போட்டிகள், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், நாளை காலை 9.00 மணியளவில் விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகம், தளம் 5,
பாசிபிளிட்டி அறையில் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம்.
போட்டியில் வெற்றி பெறு
பவர்களுக்கு பரிசுக் கோப்பையோடு, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்
நடத்தும் பட்டிமன்றம், கருத்தரங்கம் மற்றும் இலக்கியவனம் போன்ற நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு சிறந்த வாய்ப்பளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், சிறப்புப் பேச்சாளராகவும் பேராசிரியர் அ. வீரமணி கலந்து கொண்டு சிறந்த பேச்சாளராக
ஆவதற்கு யுத்திகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
தமிழமுதம் பருக அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

