களைகட்டிய பாஸ்கரியம்

களைகட்டிய பாஸ்கரியம்

2 mins read
3e902d75-57c2-4bf9-bcc4-b94f3fb34117
-

மாதங்கி இளங்­கோ­வன்

பாஸ்­கர் கலைக் கழ­கத்­தின் வரு­டாந்­திர கலை விழா­வான 'பாஸ்­க­ரி­யம்', 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து மேடை­யேற்­றப்­பட்டு வரு­கிறது. பல­த­ரப்­பட்ட இசை மற்­றும் நட­னப் படைப்­பு­கள், கலை­ஞர்­க­ளுக்­கான விரு­து­கள் எனக் கொண்­டாட்ட உணர்வு நிறைந்த ஒரு நிகழ்வு இது.

இவ்­வாண்­டின் 'பாஸ்­க­ரி­யம்' கலை விழா­வில் திரு, திரு­மதி பாஸ்­க­ரின் வாழ்க்­கைப் பய­ணத்­தைத் தத்­ரூ­ப­மா­கச் சித்­தி­ரிக்­கும் வண்­ணம் கேலிச்சித்திர நூல் ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. 'ஃபோர் த லவ் ஆஃப் டான்ஸ்' என்­னும் தலைப்­பைக் கொண்ட இந்­நூ­லில் இடம்­பெற்­றுள்ள பற்­பல அனு­ப­வங்­களும் பாஸ்­கர் தம்­ப­தி­யி­ன­ரின் மக­ளான மீனாட்சி பாஸ்­கர் நினை­வு­கூர்ந்­தவை.

இம்­மா­தம் 27ஆம் தேதி­யன்று 'குட்­மன் ஆர்ட்ஸ்' நிலை­யத்­தில் 'ஃபோர் த லவ் ஆஃப் டான்ஸ்' புத்­த­கம் வெளி­யி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வு, நான்கு நாள்­க­ளுக்கு நடை­பெற்று வரும் 'பாஸ்­க­ரி­யம்' கலை விழா­வின் தொடக்க நிகழ்ச்­சி­யாக அமைந்­தி­ருந்­தது. பல்­லாண்­டு­க­ளாக இக்­க­லைக் கழ­கத்­தில் பயின்று­வ­ரும் நட­ன­ம­ணி­கள் நட­ன­மா­டி­ய­தோடு இசைக் கலை­ஞர்­களும் பாடல்­கள் சில­வற்­றைப் படைத்­தி­ருந்­த­னர்.

'அபி க்ரிஷ்' என்ற பெய­ரில் எழு­தி­வ­ரும் எழுத்­தா­ளர் அபி­ராமி கிருஷ்­ண­ஸ்வாமி, தம் பதின்ம வய­தில் பாஸ்­கர் கலைக் கழ­கத்­தில் நாட்­டி­யம் கற்­றுக்­கொண்­ட­வர். தற்­போது குழந்­தை­க­ளுக்கு இரு­மொ­ழி­களில் நூல்­கள் எழு­தி­வ­ரும் இவர், பாஸ்­கர் தம்­ப­தி­யி­ன­ரின் கலைப் பய­ணத்­தைப் பற்றி எழுத வாய்ப்­பைப் பெற்­ற­போது பேரா­னந்­தம் அடைந்­த­தாக நூல் வெளி­யீட்­டில் கூறி­யி­ருந்­தார்.

இந்த நூலில் இடம்­பெற்­றுள்ள கேலிச்சித்திரத்தை ஆறு மாதங்­களில் உரு­வாக்­கி­ய­வர் கோல்­கத்­தா­வைச் சேர்ந்த சயான் முக்­கர்ஜி. ஒரு நூலி­லுள்ள கேலிச்சித்திரத்தை வரைவதற்கு ஏறத்­தாழ ஒன்­றி­லி­ருந்து மூன்று ஆண்­டு­கா­லம் வரை ஆக­லாம். ஆனால் குறு­கிய கால­கட்­டத்­தில் சயான் இந்த நூலுக்கான கேலிச் சித்திரத்தை வரைந்­தது பாராட்டு­க்­கு­ரி­ய­தா­கும் என்­றார் அபி­ராமி.

இவ்­வாண்­டின் 'பாஸ்­க­ரி­யம்' விழா­வில் வளர்ந்­து­வ­ரும் கலை­ஞர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கும் வகை­யில் 'பிர­சாந்­தம்' தொடர் நிகழ்ச்சி நேற்று முன்­தி­னம் முதல் இன்­று­வரை நடை­பெ­று­கிறது. புல்­லாங்­கு­ழல், வய­லின், வீணை, கர்­நா­டக இசை, பர­த­நாட்­டி­யப் படைப்­பு­கள் அதில் இடம்­பெ­று­கின்­றன. விழா­வின் ஆகச் சிறந்த அம்­ச­மாக நாளை­க­டம் கார்த்­திக் தம் 'ஹார்ட்­பீட்' இசைக்­கு­ழு­வு­டன் இணைந்து விக்­டோ­ரியா கலையரங்­கத்­தில் நிகழ்ச்­சி­யொன்­றைப் படைக்­க­­இருக்­கி­றார்.

'பாஸ்­க­ரி­யம்' கலை விழா­வில் மற்ற கலா­சா­ரங்­களை அர­வ­ணைக்­கும் வித­மாக பிலிப்­பீன்ஸ் மூங்­கில் நட­னத்தை நேற்று சிங்­கப்­பூ­ரின் பிலிப்­பீன்ஸ் நட­னக்­குழு படைத்­தி­ருந்­தது. அதோடு, மற்ற இனத்­த­வர் இந்­திய கலா­சா­ரத்­தைக் கொண்­டா­டும் வித­மாக மலே­சி­யா­வின் மிஷெல் ஜுவெனி ஒடிசி நடனத்­தைப் படைத்­தார்.

மற்ற கலைக் கழ­கங்­கள், அதா­வது பரதா ஆர்ட்ஸ், சுவா­ரி­தம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த கலை­ஞர்­களும் இவ்­வாண்­டின் 'பாஸ்­க­ரி­யம்' கலை விழா­வில் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

பாஸ்­கர் கலைக் கழ­கம் இவ்­வாண்டு வழங்­கும் சில விருது­

க­ளுக்­கி­டையே அவாண்ட் நாடகக் குழு­வின் நிறு­வ­னர் ஜி. செல்­வ­நா­த­னுக்கு, 'நாட்­டிய கலா நிபுணா' என்ற விருது வழங்­கப்­பட்­டது. அதே­போல் பரதா ஆர்ட்ஸ் நட­னப் பள்­ளி­யின் நிறு­வ­னர்­க­ளான கேச­வன் சகோ­த­ரி­கள் என்­ற­ழைக்­கப்­படும் ஜெயந்தி கேச­வன், சுகந்தி கேச­வன் ஆகி­யோ­ருக்­கும் இவ்­வி­ருது வழங்­கப்­பட்­டது.