தமிழ்மொழி மாதம்: இன்றைய நிகழ்ச்சிகள்

1 mins read

1. அனைத்துலகத் தமிழ்ப் பேச்சு, அரங்கப் பேச்சுப் போட்டிகள்

இந்நிகழ்ச்சி இன்று காலை 9.30 தொடங்கி பிற்பகல் 12.30 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ் பேச்சாளர் மன்றங்களுக்கு ஆலோசகராக இருக்கும் திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி ஏற்பாடு செய்துள்ளார். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

2. தமிழர் கலைப் போட்டி 2023

இப்போட்டி இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்குத்

தமிழர் தகவல் தொழில்நுட்ப சமுதாயம், சிங்கப்பூர் ஏற்பாடு செய்துள்ளது.

3. சுடர் தந்த தேன்

கவிமாலை சிங்கப்பூரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் நடைபெறுகிறது.