சாந்தி இரண்டு தங்கங்களுக்குக் குறி

சாந்தி இரண்டு தங்கங்களுக்குக் குறி

1 mins read
4f5a3641-e08b-414a-9243-85fcc2f64ad6
-

நோம்­பென்: கம்­போ­டி­யா­வில் நடந்­து­வ­ரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் 100 மீட்­டர், 200 மீட்­டர் என இரண்டு ஓட்­டப்­பந்­த­யங்­க­ளி­லும் தங்­கம் வெல்ல இலக்கு கொண்­டுள்­ளார் சிங்­கப்­பூ­ரின் சாந்தி பெரேரா (படம்).

கடந்த 2015ஆம் ஆண்டு சிங்­கப்­பூரில் நடந்த அப்­போட்­டி­களில் 200 மீ. ஓட்­டத்­தில் முதன்­மு­றை­யாக இவர் தங்­கம் வென்­றார்.

ஈராண்­டு­க­ளுக்­குப்­பின் நடந்த போட்­டி­களில் தங்­கத்­தைத் தக்­க­ வைக்கத் தவ­றிய சாந்தி, காயங்­க­ளா­லும் அவ­திப்­பட்­டார்.

ஆயி­னும், ஹனோ­யில் கடந்த ஆண்டு நடை­பெற்ற போட்­டி­களில் மீண்­டும் இவர் தங்­கத்­தைத் தன­தாக்­கிக்­கொண்­டார்.

இவ்­வாண்டு சாந்­திக்கு நல்­லாண்­டாக இருந்து வரு­கிறது. 200 மீட்­ட­ரில் இரு­மு­றை­யும் 100 மீட்­ட­ரில் மும்­மு­றை­யும் தமது சொந்த தேசிய சாத­னையை இவர் முறி­ய­டித்­துள்­ளார்.

ஆசி­யா­வில் இப்­போ­தைக்கு 200 மீ. ஓட்­டத்­தில் இவர்­தான் அதி­வேக வீராங்­கனை; 100 மீட்­ட­ரில் இரண்­டா­வது அதி­வேக வீராங்­கனை.

சாந்தி 4x100 மீ. அஞ்­சல் ஓட்­டத்­திலும் பங்­கேற்­க­வுள்­ளார்.