மிலான்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்தில் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது இத்தாலியின் இன்டர் மிலான் குழு. இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இன்டர், சக இத்தாலியக் குழுவான ஏசி மிலானை வென்றது.
அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்ற இன்டர் இரண்டாம் ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது. மொத்தமாக 3-0 எனும் கோல் எண்ணிக்கையில் அரையிறுதிச் சுற்றை வென்று இறுதியாட்டத்திற்கு அக்குழு முன்னேறியது.
கடைசியாக 2010ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்துக்குச் சென்ற இன்டர், அப்போது கிண்ணத்தையும் கைப்பற்றியது.