மோதலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட தாய்லாந்துக் காற்பந்துச் சங்கம்

மோதலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட தாய்லாந்துக் காற்பந்துச் சங்கம்

2 mins read
5a0848ca-0bcb-4e78-b9cc-f6d8a9d364bc
-

நோம்­பென்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளில் ஆண்­கள் காற்­பந்­துப் போட்­டி­யின் இறு­தி­ ஆட்­டத்­தில் இருமுறை சண்டை மூண்­டது.

இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் தாய்­லாந்­துக்­கும் இடை­யி­லான இந்த ஆட்­டத்­தில் இப்­படி நிகழ்ந்­ததற்கு தாய்­லாந்துக் காற்­ப­ந­துச் சங்­கம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது. தவறு இழைத்­தோ­றுக்­குக் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­படும் என்­றும் சங்கம் உறுதியளித்தது.

கம்­போ­டி­யத் தலை­ந­கர் நோம்­பென்­னின் ஒலிம்­பிக் விளை­யாட்­ட­ரங்­கில் இடம்­பெற்ற இந்­நி­கழ்­வு­தாய்­லாந்து தேசிய அணி­யின் நற்­பெ­ய­ருக்­குப் பங்­கம் விளை­வித்­துள்­ள­தாக தாய்­லாந்துக் காற்­பந்­துச் சங்­கம் குறிப்­பிட்­டது.

"குறிப்­பாக எல்லா தாய்­லாந்து மக்­க­ளை­யும் பிர­தி­நி­திக்­கும் பயிற்று­விப்­பா­ளர்­கள் பணி­யில் இருக்கும்போது சவா­லான சூழ்­நிலை­யி­லும் உணர்­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது கட்­டா­யம்.

"சண்­டை­யில் ஈடு­பட்­டோர்­மீது விசா­ரணை நடத்த குழு ஒன்று அமைக்­கப்­படும். தண்­டனை விதிக்­கப்­படும். விதி­வி­லக்­கு­கள் இருக்­காது. அணி நாடு திரும்பி­ய­வு­டன் விசா­ரணை தொடங்­கும்," என்று அறிக்கை ஒன்­றில் சங்­கம் தெரி­வித்­தது.

ஆட்­டத்­தில் 5-2 எனும் கோல் கணக்­கில் வென்று தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­யது இந்­தோ­னீ­சியா.

90 நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு கோல் எண்­ணிக்கை 2-2 என சம­நி­லை­யில் இருந்­தது. கூடு­தல் நேரத்­தில் மூன்று கோல்­க­ளைப் போட்டு இந்­தோ­னீ­சியா வாகை சூடி­யது.

32 ஆண்­டு­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளின் ஆண்­கள் காற்­பந்­துப் போட்­டி­யில் தங்­கம் வென்­றது இந்­தோ­னீ­சியா.

விறு­வி­றுப்­பான ஆட்­டத்­தில் மண்­ணைப் போடும் வண்­ணம் மோதல்­கள் அமைந்­தன. சண்­டை­கள் மூண்­ட­தைத் தொடர்ந்து மூன்று தாய்­லாந்து வீரர்­களும் ஒரு இந்­தோ­னீ­சிய வீர­ரும் சிவப்பு அட்டை காண்­பிக்­கப்­பட்டு ஆட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­னர்.

முற்­பா­தி­யில் 2-0 எனும் கோல் கணக்­கில் இந்­தோ­னீ­சியா முன்­னிலை வகித்­தது. 90வது நிமி­டத்­தில் தாய்­லாந்து சம­நிலை கண்­டது. அப்­போது முதல் சண்டை மூண்டது.

கூடு­தல் நேரத்­தில் இந்­தோ­னீசியா அதன் மூன்­றா­வது கோலைப் போட்­ட­போது மீண்­டும் சண்டை மூண்­டது.