மோசமான வானிலையால் எஃப்1 கார் பந்தயம் ரத்து

மோசமான வானிலையால் எஃப்1 கார் பந்தயம் ரத்து

1 mins read

ரோம்: மோச­மான பரு­வ­நிலை கார­ண­மாக இத்­தா­லி­யின் இமோலா நக­ரில் இவ்வார இறுதியில் நடை­பெ­ற­வி­ருந்த எமி­லியா ரொமான்யா எஃப் ஒன் கிராண்ட் பிரி பந்­த­யம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இத்­தா­லி­யின் வடக்­குப் பகுதி மோச­மான வானிலையால் பாதிக்­கப்­பட்டுள்­ளது.

எமி­லியா ரொமான்யா வட்­டா­ரத்தில் ஏற்­பட்ட மிக மோச­மான வெள்­ளத்­தால் குறைந்­தது ஐவர் மாண்­டு­விட்­ட­னர். ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அவ­ச­ர­நி­லை­யைக் கையாள்வதற்கு உதவ பந்­த­யத்தை ஒத்­தி­வைக்­கு­மாறு இத்­தா­லி­யப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் மட்­டேயோ சல்­வினி முன்­ன­தா­கக் கேட்­டுக்­கொண்­டார். கடந்த திங்கட்கிழமையன்று அப்பகுதிக்கு ஆக உயரிய வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.