ரோகித் சர்மா: இன்னிங்சின் பிற்பாதியில் கவனத்தைச் சிதறவிட்டுவிட்டோம்

ரோகித் சர்மா: இன்னிங்சின் பிற்பாதியில் கவனத்தைச் சிதறவிட்டுவிட்டோம்

1 mins read
4ef9252a-0c0a-4c04-9512-6a1f1a97a801
-

லக்னோ: லக்னோ சூப்பர் ஜயன்ட்சுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இன்னிங்சின் பிற்பாதியில் கவனத்தை சிதறவிட்டதாகக் கூறியுள்ளார் அக்குழுவின் தலைவர் ரோகித் சர்மா. இந்த ஆட்டத்தில் வெறும் ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்விகண்டது.

முதலில் பந்தடித்த லக்னோ மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது மும்பை.

மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவித்ததும் பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி கவனத்துடன் விளையாடியதும் லக்னோவிற்குப் பெரிதும் கைகொடுத்தன.

"திடல் பந்­த­டிப்­பா­ளர்­க­ளுக்கு உகந்த நிலை­யில் இருந்­ததை நாங்­கள் நன்கு அறிந்­தோம். வெற்றி இலக்கை நாங்­கள் நிச்­ச­ய­மாக அடைந்­தி­ருக்­க­லாம். ஆனால், இன்­னிங்­சின் பிற்­பா­தி­யில் கோட்­டை­விட்­டுட்­டோம்," என்று ஆட்­டத்­திற்­குப் பிறகு நடை­பெற்ற நேர்­கா­ண­லில் குறிப்­பிட்­டார் சர்மா.