குறள் அமுது - ஆயிரத்தில் ஒருவன்: இசை நாட்டிய நாடகம்

குறள் அமுது - ஆயிரத்தில் ஒருவன்: இசை நாட்டிய நாடகம்

2 mins read
faa8686e-43c0-4a33-b92d-7d2864e6cbf9
-

திருக்­கு­ற­ளைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்டு அமைக்­கப்­பட்­டது இசை நாட்­டிய நாட­கம் 'ஆயி­ரத்­தில் ஒரு­வன்'. 'மாஸ்க் ஸ்டு­டி­யோஸ்', கலா­மஞ்­சரி ஏற்­பாட்­டில் வளர்­த­மிழ் இயக்­கம், லிஷா எனும் லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வோடு இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் ­நி­கழ்ச்சி நடை­பெற்­றது.

சிறப்பு விருந்­தி­ன­ராக முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் துணைத் தலை­வ­ரு­மான இரா. தின­க­ரன் வருகை புரிந்­தி­ருந்­தார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பழங்­கால இலக்­கி­யங்­களை அனை­வ­ரும், குறிப்­பாக, இளைய தலை­முறை­யி­னர் அனை­வ­ரும் புரிந்­து­கொண்டு ரசிக்­கும் வகை­யில் இசை நாட்­டிய நாட­க­மாக படைக்கப்பட்டது.

"திரு­வள்­ளு­வ­ரால் 2,000 ஆண்­டு­க­ளுக்கு முன்பு எழு­தப்­பட்ட திருக்­கு­றள் தமிழ்ச் சங்க இலக்­கி­யத்­தின் ஒரு பகு­தி­யா­கும். இது சிறந்த இலக்­கிய மதிப்­பு­டைய ஒரு படைப்பு மட்­டு­மல்ல. குறள் அமுது திருக்­கு­ற­ளின் சாராம்­சத்­தோடு அன்­றாட வாழ்­விற்கு அவ­சி­ய­மான அனைத்து பொழு­து­போக்கு அம்­சங்­க­ளு­ட­னும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது," என்று மாஸ்க் ஸ்டு­டி­யோ­ஸின் நிர்­வாக இயக்­கு­நர் திரு கார்த்­திக் அழ­கப்­பன் கூறி­னார்.

"நிபு­ணத்­து­வம் வாய்ந்த இந்­தி­யா­வைச் சேர்ந்த கலை­ஞர்­களி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்­ளும் தனித்­து­வ­மிக்க வாய்ப்பு கிட்­டி­யது. இப்­ப­டைப்பு இன்­றைய சமு­தா­யத்­திற்­குத் திருக்­கு­ற­ளின் தொடர்­பைக் காண்­பிக்­கும் என்று நம்­பு­கி­றேன். பாரம்­ப­ரிய கலை வடி­வங்­க­ளான பொய்க்­கால் குதி­ரை­யாட்­டம், கர­காட்­டம், ஒயி­லாட்­டம், பர­த­நாட்­டி­யம் போன்­ற­வற்­றைப் பார்­வை­யா­ளர்­கள் கண்டு ரசித்­த­னர்," என்று நட­ன­மணி நிரஞ்­சனா ராம­சாமி, 18, கூறி­னார்.

"திருக்­கு­ற­ளில் 133 அதி­கா­ரங்­கள், 1,330 குறள்­கள் இருக்­கின்­றன என தெரி­யுமே தவிர பல­ருக்கு அதன் முழு­மை­யான அர்த்­தம் புரி­வ­தில்லை. வாழ்க்­கைப் பய­ணத்­தில் குழந்தை பரு­வத்­தி­லி­ருந்து அந்­தக் குழந்தை வளர்ந்து வாலி­ப­னா­கும் வரை திருக்­கு­றள் உணர்த்­தும் வாழ்க்கை விழு­மி­யங்­கள் அரு­மை­யாக கலை­ஞர்­க­ளால் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளன," என்று திரு இரா. தின­க­ரன் கூறி­னார்.

கருணாநிதி துர்கா