மறைந்த சிங்கப்பூர் வீராங்கனை விக்டோரியா லீக்கு அங்கீகாரம்

மறைந்த சிங்கப்பூர் வீராங்கனை விக்டோரியா லீக்கு அங்கீகாரம்

1 mins read
9dda4a22-1a28-4127-99e7-55011261d50f
-

சிங்­கப்­பூ­ரின் மறைந்த கலப்பு தற்­காப்­புக் கலை வீராங்­க­னை­யான விக்­டோ­ரியா லீயின் பெய­ரில் ஆண்­டு­தோ­றும் விருது ஒன்று வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதோடு அவரின் பெய­ரில் ஓர் உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டம் தொடங்­கப்­படும், அவருக்கான நினைவு நாள் அனு­ச­ரிக்­கப்­படும்.

'விக்டோ­ரியா லீ அவார்ட்' என்­ற­ழைக்­கப்­படும் புதிய விருதை ஒன் சாம்­பி­யன்­ஷிப் சிறந்த விளை­யாட்­டா­ள­ருக்கு ஆண்­டு­தோ­றும் வழங்­கும். கலப்பு தற்­காப்­புக் கலைக்­கான இவோல்வ் உடற்­ப­யிற்­சிக் கூடம் வாகை சூடும் இலக்­கு­டன் செயல்­படும் இளம் விளை­யாட்­டா­ளர்­களுக்கு உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கும்.

ஆண்­டு­தோ­றும் ஜன­வரி மாதம் 13ஆம் தேதி விக்­டோ­ரியா லீயின் நினைவு நாளாக அனு­ச­ரிக்­கப்­படும்.

நேற்று முன்­தி­னம் இந்த அறி­விப்புகள் இடம்­பெற்­றன. விக்­டோ­ரியா லீ உயி­ரு­டன் இருந்­தி­ருந்­தால் அன்று அவ­ரின் 19வது பிறந்­த­நா­ளாக இருந்­தி­ருக்­கும்.