அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு

2 mins read

மக்களின் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தமிழ் பகிர்வு அரங்கு கடந்த மே 6ஆம் தேதி இந்திய மரபுடைமைச் சங்கத்தில் பிற்பகல் இரண்டு மணி அளவில் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவில் தமிழ் எந்த அளவுக்கு உட்பகுத்தப்பட்டிருக்கிறது, தமிழை தரமுடன் படைக்க நாம் செய்யவேண்டியது யாவை என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

கணினி பயிற்றுவிப்பாளர் சி குணசேகரன் இந்த பகிர்வு அரங்கை வழிநடத்தினார்.

நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 40 பேர் வரை பங்கேற்றனர்.

பகிர்வரங்கில் தமிழ் செயற்கை நுண்ணறிவோடு அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் பயன ளிக்கும் வழியில் அமைந்துள்ள மின்னாக்கச் செயலிகள் பயன்பாட்டு முறைகள் கற்றுத் தரப்பட்டன.

கைப்பேசிகளை 5ஜி கற்றலை வழிகளில் பயன்படுத்தும் முறைகளோடு ஒலி, ஒளிபடச்சுருல்களை உருவாக்கும் எளிய வழிமுறைகள் சேவைகள் மூலம் கற்றுத் தரப்பட்டன.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சேட் ஜி பி டி வழி ஆரம்பம் முதல் முடிவுவரை தரமான தமிழ் எழுத்து படைப்புகளை உருவாக்கி அவற்றை இணையத்தில் விற்பனை செய்யும் வழிமுறை களையும் கண்டறியப்பட்டது.

மேலும் உடல்குறையுள்ளோர் பயன்பெறும் வகையில் குரல் வழி இருவழி உரையாடல்கள் மூலம் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட செய்திகள் பகிரப்பட்டன.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஓருவரான பாலர் பள்ளி முதல்வர் திருமதி அருஞ்செல்வி புகழேந்தி, தான் நடத்தும் பள்ளிகளில் குழந்தைகள் முதல் பெற்றோர், பாலர் பள்ளி ஆசிரியர்கள் இத்தகைய புத்தாக்கச் சிந்தனைமிக்க செயல் திறன்களைப் பயன்படுத்தி இன்னும் அதிக ஈடுபாட்டோடு பணிகளைச் செய்வதற்கும் கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகளை ஏற்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பெரிதும் உதவக்கூடும் எனக் கூறினார்.

தேசிய தொடக்கக்கல்லூரி மாணவி ஆஹனா, தான் பயிலரங்கில் பார்த்ததும் அறிந்ததும் புதியனவாக இருந்தன என்றார்.

நிகழ்ச்சி பற்றிக் கருத்துரைத்த பயிற்றுவிப்பாளர் சி.குணசேகரன், வாழ்நாள் கற்றல் பயணம் மூலம் பெற்ற மறு பயிற்சி தம்மை எதிர்காலத்திற்கு உயரிய வேலை வாய்ப்புகளோடு உயர்வதற்கு செயற்கை நுண்ணறிவுச் செயல்திறன் உதவி இருப்பதோடு, தமிழ்மொழி இணையச் செயல் திறன்களை பொருளீட்டும் முறையோடு உருவாக்கும் வழிமுறைகளை தமக்கு கற்றுத் தந்திருப்பதாகவும் சொன்னார்.