பாலியல், சிற்றின்பம், வாழ்க்கையில் உணர்வுபூர்வமான நிறைவு குறித்து பண்டைய சமஸ்கிருத உரையான காமசூத்ராவை இந்தியா உலகிற்கு வழங்கியிருக் கலாம். எனினும், உலகின் முதல் உதட்டோடு உதடு பொருத்திக் கொடுக்கும் முத்தம் இந்தியாவில்தான் தோன்றியது என்ற இதுநாள் வரையிலான கருத்தை மாற்றும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது பண்டைய மெசபத்தோமியாவில் கிட்டத்தட்ட கி.மு. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 4,500 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவாகி இருப்பதாக அக்கட்டுரை கூறியது.
முத்தம் வாய்வழி பரவும் நோய்களைப் பரப்புவதற்கு உதவியிருக்கலாம் என்று கூறுவதற்கு ஆதாரங்கள் உள்ளதாக 'ஜர்னல் சயன்ஸ்' எனும் இதழில் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய ஆய்வுகளின்படி, உதட்டு முத்தம் இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது எனக் கருதப்பட்டது.
அன்புடன் பெற்றோர் முத்தமிடுவது பொதுவானதாகத் தோன்றுகிறது. எனினும், காமம் நிறைந்த உதட்டோடு உதடு பொருத்தும் காதல் முத்தம் கலாசார ரீதியாக உலகளாவியதாக காணப்படவில்லை. இது பெரும்பாலான பண்டைய கலாசாரங்களில் அறியப்பட்டிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மெசபத்தோமியாவின் ஆரம்பகால நூல்களில் முத்தம் சிற்றின்பச் செயல்கள் தொடர்பாக விவரிக்கப்பட்டது. காதலிக்க பல வழிகள் இருந்தாலும் காதலை வெளிப்படுத்த காதலர்கள் அடிக்கடி பயன்படுத்தும் உத்தி முத்தம். இது நமது அபரிமிதமான அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இதன்மூலம் உறவு பலப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனால், இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. முத்தமிடுவதன் மூலம் பலவகையான நோய்களும் வரலாம் என்பதும் ஒரு மறுக்கமுடியாத உண்மை.