மகுடம் சூடிய மேன்சிட்டி

மகுடம் சூடிய மேன்சிட்டி

2 mins read
c45a7b84-4929-4324-9cf1-c46058d8270a
-

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்பந்­துப் போட்­டி­யின் முடி­சூடா மன்­ன­னாக மான்­செஸ்­டர் சிட்டி தொடர்ந்து திகழ்­கிறது.

கடந்த ஆறு பரு­வங்­களில் ஐந்து முறை அது லீக் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

இம்­முறை லீக் பரு­வம் முடி­வ­தற்கு முன்பே கிண்­ணம் சிட்­டி­யின் வச­மா­னது.

நேற்று நடை­பெற்ற ஆட்­டத்­தில் நாட்­டிங்­ஹாம் ஃபாரஸ்ட் குழு­வி­டம் ஆர்­ச­னல் தோல்வி அடைந்த பிறகு கிண்­ணம் சிட்­டிக்­குச் சொந்­தம் என்­பது உறு­தி­யா­னது.

நேற்று மாலை நில­வ­ரப்­படி 35 ஆட்­டங்­களில் கள­மி­றங்கி 85 புள்­ளி­கள் பெற்று முன்­னிலை வகித்­தது சிட்டி. சிங்­கப்­பூர் நேரப்­படி இரவு 11 மணிக்கு அது செல்­சி­யு­டன் மோதி­யது.

இந்த ஆட்­டத்­தில் வெற்றி பெற்­றி­ருந்­தால் அதற்­குக் கூடு­த­லாக மூன்று புள்­ளி­கள் கிடைத்­தி­ருக்­கும்.

ஆனால் தோல்வி அடைந்து ஒரு புள்­ளிகூட பெறா­விட்­டா­லும் லீக் பட்­டி­ய­லில் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கும் ஆர்­ச­ன­லால் அதை முறி­ய­டிக்க முடி­யாது.

ஆர்­ச­னல் இது­வரை 37 ஆட்­டங்­களில் விளை­யாடி உள்­ளது. 81 புள்­ளி­கள் பெற்­றுள்ள நிலை­யில் அதற்கு ஓர் ஆட்­டம் மட்­டுமே எஞ்­சி­யுள்­ளது.

எனவே, ஆர்­ச­னல் அதன் கடைசி ஆட்­டத்­தில் வெற்றி பெற்று மூன்று புள்­ளி­க­ளைப் பெற்­றா­லும் அக்­கு­ழு­வால் சிட்­டியை எட்ட முடி­யாது.

அபு தாபி­யின் ஷேக் மன்­சூர் ஸாஹீத் அலன் நயான் 2008ஆம் ஆண்­டில் சிட்­டியை வாங்­கி­ய­தி­லி­ருந்து அக்­குழு ஏழு முறை பிரி­மி­யர் லீக் பட்­டத்தை வென்று­விட்­டது.

கடந்த பிப்­ர­வரி மாதம் 5ஆம் தேதி­யன்று ஸ்பர்ஸ் குழு­வி­டம் சிட்டி தோல்வி அடைந்­தது.

ஆனால் அடுத்த ஆட்­டங்­களில் மிக­வும் சிறப்­பா­கச் செயல்­பட்டு 40 புள்­ளி­களை சிட்டி குவித்­தது. ஆர்­ச­ன­லுக்கு எதி­ரான இரண்டு ஆட்­டங்­க­ளி­லும் சிட்டி வாகை சூடி­யது.

இனி சிட்டி அதன் கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மொத்தம் 94 புள்ளிகளுடன் அது போட்டியை நிறைவு செய்யும்