நெருங்கும் யுனைடெட், நியூகாசல்; லிவர்பூலுக்குப் பின்னடைவு

நெருங்கும் யுனைடெட், நியூகாசல்; லிவர்பூலுக்குப் பின்னடைவு

2 mins read
6d277fe8-63da-4e6b-9a2d-1e437f0dc067
-

போர்ன்மத்: அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை மான்செஸ்டர் யுனைடெட் நெருங்கியுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது போர்ன்மத் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்றது.

மத்தியத் திடல் ஆட்டக்காரர் கேஸ்மிரோவின் சாகச கோல் யுனைடெட்டுக்கு வெற்றியைத் தந்தது.

இதன் விளைவாக 69 புள்ளிகளுடன் யுனைடெட் லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள நியூகாசலும் 69 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் யுனைடெட்டைவிட அது கூடுதல் கோல்கள் போட்டுள்ளது.

இந்நிலையில், நியூகாசலும் யுனைடெட்டும் இன்னும் ஒரு புள்ளி எடுத்தால் போதும், சாம்பியன்ஸ் லீக்கில் இடம்பெறுவது உறுதியாகிவிடும்.

இருகுழுக்களுக்கும் தலா இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் ஓர் ஆட்டத்திலாவது குறைந்தது சமநிலை கண்டால் இலக்கை அடைந்துவிடலாம்.

நியூகாசல் நாளை லெஸ்டர் சிட்டியுடன் மோதுகிறது. ஆனால் இந்த ஆட்டம் அதற்குச் சவால்மிக்கதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்­குக் கார­ணம் லெஸ்­ட­ரின் நிலை. அது தற்­போது பட்­டி­ய­லில் 19வது இடத்­தில் உள்­ளது.

லீக் போட்­டி­யில் மொத்­தம் 20 குழுக்­கள் போட்­டி­யி­டு­கின்­றன. இதில் கடைசி மூன்று இடங்­களில் போட்­டியை முடித்­துக்­கொள்­ளும் குழுக்­கள் அடுத்த பரு­வம் இரண்­டாம் நிலை லீக் போட்­டிக்­குத் தள்­ளப்­படும்.

எனவே, அத்­த­கைய ஒரு நிலை தனக்கு ஏற்­ப­டா­மல் இருக்க நியூ­கா­ச­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் லெஸ்­டர் மிகுந்த முனைப்­பு­டன் விளை­யா­டும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

லெஸ்­டர் சிட்­டி­யைச் சமா­ளித்து நியூ­கா­ச­லால் குறைந்­தது ஒரு புள்­ளி­யா­வது எடுக்க முடி­யுமா என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டும்.

யுனை­டெட் அதன் அடுத்த ஆட்­டத்­தில் செல்­சி­யு­டன் மோது­கிறது.

இந்த ஆட்­டம் வரும் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று நடை­பெ­று­கிறது.

செல்சி தற்­போது லீக் பட்­டி­ய­லில் 12வது இடத்­தில் உள்­ளது.

இது ஒரு­பு­றம் இருக்க, சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டிக்­குத் தகுதி பெற வேண்­டும் என்ற முனைப்­பு­டன் இருக்­கும் லிவர்­பூ­லுக்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.

ஆஸ்­டய் வில்­லா­வுக்­கும் லிவர்­பூ­லுக்­கும் இடை­யி­லான ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது.

ஓர் ஆட்­டம் எஞ்­சி­யி­ருக்க 66 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லில் ஐந்தாவது இடத்­தில் உள்­ளது லிவூர்­பூல்.