'பிளே ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

'பிளே ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

2 mins read

புது­டெல்லி: ஐபி­எல் கிரிக்­கெட் போட்­டி­யின் 'பிளே ஆஃப்' சுற்­றுக்கு சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி தகுதி பெற்­றுள்­ளது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் டெல்லி கேப்­பி­டல்ஸ்-சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­கள் மோதின. இந்த ஆட்­டம் டெல்­லி­யில் நடை­பெற்­றது.

பூவா தலை­யா­வில் வென்ற சென்னை முத­லில் பந்­த­டித்­தது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 3 விக்­கெட்­டு­களை இழந்து 223 ஓட்­டங்­கள் எடுத்­தது.

தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக கள­மி­றங்­கிய சிவம் துபே, கான்வே ஜோடி அதி­ர­டி­யாக ஆடி­யது. இரு­வ­ரும் அரை சதம் அடித்­த­னர்.

முதல் விக்­கெட்­டுக்கு 141 ஓட்­டங்­கள் சேர்த்த நிலை­யில், ருது­ராஜ் 79 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­தார்.

கான்வே 87 ஓட்­டங்­களில் வெளி­யே­றி­னார்.

இதை­ய­டுத்து, 224 ஓட்­டங்­கள் எடுத்­தால் வெற்றி என்ற இலக்­கு­டன் டெல்லி அணி கள­மி­றங்­கி­யது.

சென்னை அணி­யி­ன­ரின் துல்­லி­ய­மான பந்­து­வீச்­சில் டெல்லி அணி திண்­டா­டி­யது. 26 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டு­களை இழந்து திண­றி­யது.

ஒரு­பு­றம் விக்­கெட்­டு­கள் வீழ்ந்­தா­லும் அணித் தலை­வர் டேவிட் வார்­னர் பொறுப்­பு­ட­னும் அதி­ர­டி­யா­க­வும் ஆடி­னார்.

வார்­னர் 87 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­தார்.

இறு­தி­யில், டெல்லி அணி 146 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்­தது.

இதன்­மூ­லம் 77 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்ற சென்னை அணி 'பிளே ஆப்' சுற்­றை­யும் உறுதி செய்­தது.

சென்னை அணி சார்­பில் தீபக் சாஹர் 3 விக்­கெட்­டு­களும், பதீ­ரனா, தீக்‌ஷனா தலா 2 விக்­கெட்­டு­களும் வீழ்த்­தி­னர்.

மற்­றோர் ஆட்­டத்­தில் கோல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணியை லக்னோ அணி தோற்­க­டித்­தது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஓர் ஓட்டம் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.