உலகக் கிண்ண வில்வித்தை: தங்கம் வென்றது இந்தியா

1 mins read

ஷாங்­காய்: உல­கக் கிண்ண வில்­வித்­தை­யில் (நிலை2) இந்­தியா வாகை சூடி தங்­கம் வென்­றுள்­ளது.

இப்­போட்டி சீனா­வின் ஷாங்­காய் நக­ரில் நடை­பெற்­றது.

இதில் நேற்று முன்­தி­னம் நடந்த காம்­ப­வுண்ட் கலப்பு அணி­கள் பிரி­வின் இறுதி ஆட்­டத்­தில் இந்­தி­யா­வின் ஓஜாஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்­னம் ஜோடி, தென் கொரி­யா­வின் கிம் ஜோங்ஹோ-ஓ யோயூன் இணையை எதிர்­கொண்­டது.

விறு­வி­றுப்­பாக நடை­பெற்ற இப்­போட்­டி­யில் ஓஜஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்­னம் ஜோடி 156-155 என்ற புள்ளி கணக்­கில் தென்­கொ­ரிய இணையை வீழ்த்தி தங்­கப்

பதக்­கத்தை வென்­றது.

கடந்த மாதம் துருக்­கி­யில் நடந்த உல­கக் கோப்பை (நிலை 1) போட்­டி­யி­லும் இந்­திய இணை தங்­கம் வென்று இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­போல் காம்­ப­வுண்ட் தனி­ந­பர் பிரி­வின் இறு­திப்­போட்­டி­யில் இந்­திய வீரர் பிர­த­மேஷ் ஜவ­கர் 149-148 என்ற புள்­ளிக் கணக்­கில் இரண்டு முறை உலக வெற்­றி­யா­ள­ரும் தர­வ­ரி­சை­யில் முத­லி­டம் வகிக்­கும் வீர­ரு­மான நெதர்­லாந்­தின் மைக் கிளா­ச­ருக்கு அதிர்ச்சி அளித்து தங்­கப்­ப­தக்­கத்தை கைப்­பற்­றி­னார்.

இதுவே 19 வயது பிர­த­மேஷ் ஜவ­கர் உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் வென்ற முதல் பதக்­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.