சுதிர்மான் கிண்ணம்: வென்றது சீனா

1 mins read

சூசோ: சுதிர்மான் கிண்ணப் பூப்பந்துப் போட்டியில் சீனா வாகை சூடியுள்ளது.

இக்கிண்ணத்தை அது 13வது முறையாக வென்றுள்ளது.

இறுதிச் சுற்றில் அது தென்கொரியாவை 3-0 எனத் தோற்கடித்தது.

சொந்த மண்ணில். சொந்த ரசிகர்களின் முன் சீனப் பூப்பந்துக் குழு மிகவும் சிறப்பாக விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றியது. 1993ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும் இறுதிச் சுற்றுக்கு சீனா தகுதி பெற்று வருகிறது.