பண்பாட்டுக் கூறு பேணும் படைப்புகள்

பண்பாட்டுக் கூறு பேணும் படைப்புகள்

2 mins read
e86e3563-0d31-4db2-a0f8-8898739f49a0
-

ஆ. விஷ்ணு வர்­தினி

இந்­திய பல­கா­ர­மான ஜிலேபி, அகல் தீபங்­கள் போன்­ற­வற்­றின் வடி­வ­மைப்­பு­கள் லசால் கல்­லூரி மாண­வர்­க­ளின் கைவண்­ணத்­தில் கலைப்­ப­டைப்­பு­க­ளாகி உள்­ளன. இந்­திய பண்­பாட்டை வடி­வ­மைப்­பு­ மூ­லம் நவீ­ன­ம­ய­மான கண்­ணோட்­டத்­தில் காட்­சிப்­படுத்து­கிறது லசால் கல்­லூ­ரி­யின் 'புரோ­ஜெக்ட் சூர்யா'.

நீடித்த நிலைத்­தன்மை கொண்­ட­வை­யாக, இயற்­கைக்கு உகந்­த­வை­யாக இவை வடி­வ­மைக்­கப்பட்­டுள்­ளன. பல இன கலாசாரங்களிலும் காணப்படும் தீபங்­கள், இந்­தி­யப் பல­கா­ரங்­கள் முத­லிய பண்­பாட்டுக் கூறு­களை அன்­றாட வாழ்­வில் இடம்­பெ­று­பவை­யாக பிற இன மாண­வர்­கள் வடி­வ­மைத்­துள்­ள­னர்.

மாணவி லிம் கே லியின் 'ஸ்னெக்' எனும் மின்­விளக்கு படைப்பு அவரை வெகு­வாக ஈர்த்த ஜிலே­பி­யின் வடி­வத்­தை­யும் நிறத்­தை­யும் மைய­மாகக் கொண்­டுள்­ளது. பகிர்ந்துண்­ணும் கலா­சா­ரத்­தை­யும், கவ­லை­யற்ற குதூ­க­ல­மான சிறு­பி­ரா­யத்­தை­யும் ஜிலேபி நினை­வூட்­டு­கிறது என்றார் அவர்.

"மாறி வரும் சூழ­லில் இத்­த­கைய வடி­வ­மைப்­பு­க­ளின்­மூ­லம் பண்­பாட்­டுக்கூறு­களை நீண்­ட­கா­லத்­துக்­குத் தக்­க­வைக்கலாம் என்று நம்­பு­கி­றேன்," என்­றார், நண்­பர்­கள், ஆராய்ச்­சி­யின் வாயி­லாக இந்­திய பண்­பாட்­டில் நாட்­டம் கொண்­டுள்ள கே லி.

தீபங்­களை தமது மேசை மின்­வி­ளக்கு படைப்­புக்­காக தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­தார் மாணவி லோ ஹோ யின். வள­ரும் பரு­வத்­தில் சீனா­வில் தாம் கண்ட எண்­ணெய் விளக்­கு­கள் இந்­திய கலா­சா­ரத்­தில் முக்­கிய பங்கு வகிப்­பதை அறிந்­த­போது அவர் வியப்­புற்­றார். சூரிய சக்­தி­யில் எரி­யும் அவரின் மேசை மின்­வி­ளக்கு, தீபத்­தின் வடி­வத்­தைத் தழு­வி­யுள்­ள­தோடு, மெல்­லிய ஒளியை உமி­ழும் வகை­யில் வடி­வ­மைக்­கப்பட்­டுள்­ள­தாக ஹோ யின் விவ­ரித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் வாழும் பல இன மக்­க­ளின் கலா­சா­ரங்­களும் வாழ இத்­த­கைய நவீன வடி­வ­மைப்பு முயற்­சி­கள் கைகொ­டுக்­கும் என்­பது அவ­ரின் எண்­ணம்.

இவர்­கள் உட்­பட, மொத்த 13 மாண­வர்­கள் வடி­வ­மைத்த நவீன வடி­வ­மைப்­புப் படைப்­பு­கள் மிலன் நக­ரில் உள்ள பிரை­யன்&பேரி வளா­கத்­தில் கடந்த மாதம் கண்­காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

vishnuv@sph.com.sg