கருணாநிதி துர்கா
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்துக் கலைஞர்களின் படைப்புகள் மீள்படைப்புச் செய்யப்பட்டு சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1980 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் காணொளி வடிவம் தோன்றியதன் முக்கியமான தருணங்களைச் சித்திரிக்கிறது 'சீ மி, சீ யு' (See Me, See You) என்று அழைக்கப்படும் இந்த கண்காட்சி.
ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற வழக்கமான கலை வடிவங்களிலிருந்து வேறுபட்டு, புதுமையாக பார்வையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் காணொளிப் படைப்புகளை அந்தக் கால கட்டத்தில் உருவாக்கினர் அந்தக் கலைஞர்கள். மக்கள் தங்களை சுற்றியுள்ள நகரும் பிம்பங்களைப் பதிவு செய்வதன் மூலம் தங்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்த முடிகிறது.
வீடியோ கேமராக்கள், காணொளி வடிவத்தின் கலாசார முக்கியத்துவத்தையும் காலப்போக்கில் அவற்றின் அதிவேக வளர்ச்சியையும் இந்தக் கண்காட்சி வெளிப்படுத்துகிறது.
கண்காட்சியில் ஒரு சுவாரசியமான அம்சமாக உயிருள்ள கோழிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தொழில்நுட்பம் சார்ந்த கலைப் படைப்புகளைப் பாதுகாப்பதில் உள்ள புதிய சவால்களை இக்கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது.
இரு அங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை பொது மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
முதல் அங்கம் மே 5ஆம் தேதி முதல் செப்டெம்பர் 17ஆம் தேதி வரையும்; இரண்டாம் அங்கம் இவ்வாண்டு அக்டோபர் 13ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
dhurga@sph.com.sg

