படப்பிடிப்புக் குழுவாக மாறிய உள்ளூர் நடனக்குழு

படப்பிடிப்புக் குழுவாக மாறிய உள்ளூர் நடனக்குழு

1 mins read
3edf73ae-64e1-46d7-a85e-8acfd9ed44cf
-

'ஸொஸொ' (ZOZO) என்ற தலைப்­பி­லான 20 நிமிட தமிழ் குறும்­ப­டம் (படம்) வரும் சனிக்­கி­ழமை மே 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிங்­கப்­பூர் ரெப்­பர்­டரி தியேட்­ட­ரில் திரை­யி­டப்­ப­ட­வுள்­ளது.

நகைச்­சுவை கலந்த திகில் பட­மான இதில் நான்கு முக்­கிய கதா­பாத்­தி­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ள­ன. ராக­தீ­பன், வை-டி, அர­விந்த், பர­தன் நடித்­துள்ள இந்த குறும்­ப­டத்தை 'ஃபெசஸ்' தயா­ரிப்­புக் குழு தயா­ரித்­துள்­ளது.

இக்குழுவின் நிறு­வ­னர் டேனியல் இக்­கு­றும்­ப­டத்தை இயக்­கி­யுள்­ளார். துணை நிறு­வனர் கார்த்­திக் ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார். சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்ள 'மேஜிக் ஆஃப் ஃபெசஸ்' நட­னக்­குழு, தற்­போது 'ஃபெசஸ்' தயா­ரிப்புக் குழு­வாகி உள்­ளது. இக்­கு­ழு­வின் இரண்­டா­வது குறும்­ப­டம் 'ஸொஸொ'.

செய்தி: துர்க்கா