இந்திய நகைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் மேத்தா ஜூவல்லரியின் கைகளால் செய்யப்பட்ட பாரம்பரிய நகைகளும் நகை வடிவமைப்புகளைக் கொண்டு நெய்யப்பட்ட நல்லி சின்னசாமி செட்டியின் தனித்துவமான புடவைகளும் இடம்பெறுகின்றன. பாரம்பரியமும் தற்காலப் பாணியும் இணைந்த இந்த நகைகளும் புடவையும் இந்திய அழகியலை வெளிப்படுத்துகின்றன.
மதிப்புமிக்க கற்களின் மதிப்பறிவது, நகைகளையும் கற்களையும் பராமரிக்கும் முறைகள் பற்றியும் கண்காட்சியில் தெரிந்துகொள்ளலாம்.
'ஜெம் மியூசியத்'தின் கற்கள் மதிப்பீடு, பழுதுபார்ப்பு, ட்ரிகா அண்ட் லெவிட்டாவின் நகைக் காட்சி, ஃபரூக் தி ஃபிரேமரின் நகைச் சட்டமிடுதல், நாஃபா மாணவர்களின் நகைக்காட்சி- மோதிரம் செய்முறை விளக்கம் போன்ற அங்கங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
கண்ணுக்கு விருந்தாக அமையும் இக்கண்காட்சி நகைப் பராமரிப்பு பற்றி அறிந்துகொள்ளவும் உதவும். அனுமதி இலவசம்.
மே 26, காலை 11.30 - மாலை 5 மணி வரை.
இடம்: லெவல் 3, தி கொக்கூன் ஸ்பேஸ், டிசைன் ஆர்ச்சர்ட், 250 ஆர்ச்சர்ட் ரோடு.

