வாட்டி வதைக்கும் வெயிலில் அயராது வேலை

கடந்த சில மாதங்­க­ளாக உல­கெங்­கும் வெப்ப அலை­கள் மக்­க­ளின் அன்­றாட வாழ்வை பாதித்து வரு­கிறது. இது­வரை காணாத அள­வில் ஆசிய நாடு­களில் வெப்ப­நிலை உச்­சத்­தைத் தொட்­டது.

மே மாதத்­தின் முதல் இரண்டு வாரங்­களில் சிங்­கப்­பூ­ரில் அதி­க­பட்ச வெப்­ப­நிலை 34 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் மேலா­கப் பதி­வா­கி­யது. குறிப்­பாக எட்டு தினங்­களில் வெப்­ப­நிலை 35 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் அதி­க­மா­கப் பதி­வா­னது என்று தேசிய சுற்­றுப்­புற அமைப்பு அறி­வித்­தது.

லேசான காற்று, தெளி­வான வானம் ஆகி­யவை சிங்­கப்­பூ­ரின் பல பகு­தி­களில் அதிக வெப்­ப­நிலையை ஏற்­ப­டுத்­தின. 40 ஆண்­டு­கள் காணாத உச்ச வெப்­ப­நிலை மே 13ஆம் தேதி அங் மோ கியோ­வில் உண­ரப்­பட்­டது.

அன்று வெப்­ப­நிலை 37 டிகிரி செல்­சி­ய­ஸைத் தொட்­டது. முன்­ன­தாக 1983ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில்­தான வெப்­ப­நிலை அவ்­வ­ளவு அதி­க­மா­கப் பதி­வா­ன­தென தேசிய சுற்­றுப்­புற அமைப்பு கு­றிப்­பிட்­டது. அவ்­வப்­போது பெய்து வரும் லேசான மழை கடும் வெயி­லில் பணி­பு­ரி­வோ­ருக்கு வெப்­பத்­தி­லி­ருந்து தற்­கா­லிக ஓய்வு வழங்­கு­கிறது.

சாங்கி விமான நிலை­யத்­தில் பணி­பு­ரிந்­து­வ­ரும் திரு முர­ளி­த­ரன் லட்­சு­ம­ணன், 48, “நாங்­கள் விமான ஓடு பாதை­யில் வேலை பார்க்­கும்­போது வெயி­லை­யும் தாண்டி விமா­னங்­கள் கிளம்­பு­வ­தும் இறங்­கு­வ­துமே அதிக வெப்­பத்தை ஏற்­ப­டுத்­தும். அத்­த­கைய சூழ­லில் வேலை பார்ப்­பதே சிர­ம­மாக இருக்­கும். கடந்த சில வாரங்­க­ளாக வாட்டி வரும் வெயி­லின் கார­ணத்­தால் கூடு­தல் சவா­லாக உள்­ளது. பலர் சோர்­வ­டைந்து மயக்­க­மாக உணர்­வ­தா­க­வும் அவர்­க­ளுக்கு அடிக்­கடி தலை­வலி வரு­வ­தா­க­வும் கூறி­யுள்­ள­னர். வேலை­யி­டத்­தில் மேலா­ளர்­கள் நீர் அருந்த கூடு­தல் இடை­வெ­ளி­களை வழங்­கு­வது உத­வு­கிறது,” என்று பகிர்ந்­து­கொண்­டார்.

சாலை அமைப்­புப் பணி­களில் ஈடு­படும் 36 வயது மாரி­முத்து கும­ரன், சுட்­டெ­ரிக்­கும் வெயில் கொண்டு வந்த சவால்­களை பகிர்ந்­து­கொண்­டார்.

“சுட்­டெ­ரிக்­கும் வெயி­லில் வேலை பார்ப்­பது புதி­தல்ல. இளைப்­பாற நிழல் இல்­லாத சாலை­யில் நான் வேலை செய்­திருக்கிறேன். இருப்­பி­னும், கடந்த சில நாள்­க­ளாக வாட்­டிய வெப்ப அலை அதிக சோர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. என்­னு­டன் வேலை செய்­யும் ஓர் இளம் ஊழி­ய­ருக்கு வெயி­லில் நீண்ட நேரம் வேலை செய்ததால் தோலில் சில பிரச்­சினை­கள் தோன்­றி­ய­து. பணி­களை முடிப்­ப­து­கூட சிர­ம­மாக இல்லை. வெயி­லைத் தாங்­கு­வ­து­தான் பெரும் சவா­லாக உள்­ளது,” என்­றார் திரு மாரி­முத்து.

‘ஏ&பி ஸ்க­ஃபோல்ட் எஞ்­சி­னி­ய­ரிங்’ நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான மாயா பால­சுப்­ர­ம­ணி­யம், “கடும் வெயில் காலம் ஊழி­யர்­க­ளின் பணி நேரத்தை கடி­ன­மாக்­கு­கிறது என்­பதை அறிந்து கொண்­ட­வு­டன், ஒவ்­வொரு மூன்று மணி நேரத்­திற்­கும் ஊழி­யர்­கள் தண்­ணீர் அருந்­து­வதை கட்­டா­ய­மாக்­கி­னோம். அதோடு, வெயில் ஏற்­ப­டுத்­திய சோர்­வைப் புரிந்­து­கொண்ட ஊழி­யர்­கள் தேவை­யான அளவு இடை­வெ­ளி­கள் பெறு­வ­தை­யும் உறு­தி­செய்­தோம். செயல்­தி­றன் குறைந்­தா­லும் எங்­க­ளுக்­கா­கப் பணி­பு­ரி­வோ­ரின் பாது­காப்பே முக்­கி­யம் என்­ப­தால் இந்­ந­ட­வ­டிக்­கை­களை எடுத்­தோம்,” என்று குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய வெப்ப அலை­கள், பரு­வ­நிலை மாற்­றத்­தின் பல­மான தாக்­கங்­களை உணர்த்­தி­யுள்­ளன.

சபிதா ஜெயகுமார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!