சிங்கப்பூர் கலை அரும்பொருளக திட்டத்தின்கீழ் புதிய கலைப் படைப்புகள்

‘தி எவ்­ரிடே மியூ­சி­யம்’ என்ற பொதுக் கலைத் திட்­டம் சிங்­கப்­பூர் கலை அரும்­பொ­ரு­ள­கத்­தி­னால் சென்ற ஆண்டு ஜூலை மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­திட்­டத்­தின்­கீழ் தஞ்­சோங் பகார் வட்­டா­ரத்­தி­லும் ரயில்­பாதை சுற்­று­வட்­டா­ரத்­தி­லும் பல புதிய சம­கால கலைப் படைப்புகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

நம் தின­சரி வாழ்க்­கை­யில் கலை உணர்­வைப் புகுத்தி சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே புத்­தாக்க சிந்­த­னை­யைத் தூண்டி அவர்­க­ளை­யும் கலைப் படைப்­பு­கள் உரு­வாக்க ஊக்­கு­விப்­பதே இத்­திட்­டத்­தின் நோக்­க­மாக அமை­கிறது. பொது இடங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்­தக் கலைப் படைப்புகள் ஒன்­பது சிங்­கப்­பூர் கலை­ஞர்­க­ளின் வெவ்­வேறு கண்­ணோட்­டங்­க­ளைச் சித்­திரிக்­கின்­றன.

தஞ்­சோங் பகார் டிஸ்ட்­ரி­பார்க், எவர்ட்­டன் பார்க், டக்ஸ்ட்­டன் பிளென் பார்க் என தஞ்­சோங் பகார் வட்­டா­ரத்­தில் ‘தஞ்­சோங் பகா­ரின் கலைப் படைப்­பு­கள்: நம் வட்­டா­ரத்­தில் கலை­யு­டன் இணைந்­தி­ருப்­போம்’ (போர்ட்­ரெய்ட்ஸ் அஃப் தஞ்­சோங் பகார்: என்­க­வுன்­டர்ஸ் வித் ஆர்ட் இன் தி நெய்­மர்­ஹூட்) என்ற கருப்­பொ­ரு­ளில் ஆறு கலைப் படைப்புகள் உள்­ளன. மேலும், கம்­போங் பாரு பேருந்து முனை­யத்­தி­லும் வெசெக்ஸ் வட்­டா­ரத்­தி­லும் ‘சிங்­கப்­பூர் டீவி­யே­ஷன்: வன்­டர் வித் ஆர்ட் த்ரு தி ரெய்ல் கோரிடார்’ என்ற கருப்­பொ­ரு­ளில் மூன்று கலைப் படைப்புகள் உள்­ளன.

நம் அன்­றாட வாழ்க்­கை­யில் அதி­கம் சிந்­திக்­காத விஷ­யங்­களைப் பற்­றிய கலை­ஞர்­க­ளின் ஆழ­மான சிந்­த­னை­க­ளால் உரு­வான கலைப் படைப்­பு­கள் இவை. உதா­ர­ண­மாக மனி­தர்­க­ள் நாம் நடைப்­ப­யிற்­சி­யு­டன் கொண்ட உற­வைப் பற்­றிப் பார்­வை­யா­ளர்­க­ளுக்­குக் கூறு­கிறது டான் பின் பின்­னு­டைய 27 நிமிட காணொ­ளிப் படைப்பு. இந்­தப் புதிய கலைப் படைப்புகள் அனைத்­தும் 2025ஆம் ஆண்டு மார்ச் ஒன்­ப­தாம் தேதி வரை பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­படும்.

கருணாநிதி துர்கா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!