தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேநீர் குறித்த விழிப்புணர்வு தினம்

1 mins read

தேயி­லை­யின் உற்­பத்­தி­யி­லும் தேநீர் பரு­கு­வ­தி­லும் நீடித்த நிலைத்­தன்மை பழக்­கத்தை கடை­பி­டிக்க மக்­களை ஊக்­கு­விக்­கும் நோக்­கு­டன் அனைத்­து­லக தேநீர் தினம் இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று கொண்­டா­டப்­பட்­டது. அன்­றா­டம் சுவைத்து குடிக்­கும் இந்த பானத்தைக் கொண்­டா­ட­வும் பசி, வறுமை போன்ற உல­கப் பிரச்­சி­னை­களை எதிர்த்­துப் போரா­டு­வ­தில் தேநீ­ரின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் இந்நாள் அமைந்­துள்­ளது.

உற்­பத்தி நிறு­வ­னங்­கள் வளரும் வேளையில் தேநீர் உற்­பத்­தி­யில் ஈடு­படும் நாடு­க­ளின் மக்­கள் வறு­மை­யி­லும் பசி­யி­லும் தவிப்­பதை ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் ஓர் அறிக்­கை­யில் அறி­வித்­தி­ருந்­தது. சீனா­வில் 5,000 ஆண்­டு­க­ளுக்கு முன்பு முதன்­மு­த­லாக அருந்­த­ப்பட்ட தேநீர் இப்­போது உல­கம் முழு­வ­தும் பல்வேறு வகைகளில் அருந்­தப்­ப­டு­கிறது. தேநீர் தினத்தை முன்­னிட்டு சிங்­கப்­பூ­ரில் பின்பற்றப்படும் பலவிதமான தேநீர் செய்­மு­றைகளை தமிழ் முரசு அறிந்து வந்­தது.

புதினா, இஞ்சி, ரோஜா பூ இலை­கள் போன்­ற­வற்றை இடித்து கருப்பு அல்­லது ஜப்­பா­னிய வகை பச்சை தேநீ­ரில் (கிரீன் டீ) கலந்து குடிப்­பது 26 வயது ஆத­வனுக்கு வழக்­கம். நீண்டகாலமாக வயிற்றுப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்ட இவர் தனது பாட்­டி­யி­டம் இந்த செய்­மு­றையைக் கற்­றுக்கொண்­டார்.

தேநீ­ரில் காப்­பியைக் கலந்து வெங்­கா­யம், இஞ்சி, ரோஜா செடியின் இலை­கள் போன்­ற­வற்றை மூன்று நாள்க­ளுக்கு ஊற வைத்து, வடி­கட்­டிய பிறகு உருவாகும் கஷா­யத்தை வாரத்­திற்கு ஒருமுறை தலை­யில் தேய்த்துக்கொள்வாராம் 60 வயது அஞ்­சலை தேவி. தமிழ் முரசு சந்தித்த தேநீர் கலைஞர்களில் இவர்கள் ஒருசிலரே.

ரச்சனா வேலாயுதம்