ஆபத்தை ஏற்படுத்தும் அழகு

மோன­லிசா

கூர்­மை­யான உய­ர் குதி­கால் கால­ணியை அன்­றா­டம் அணி­ப­வர்­க­ளுக்கு எலும்பு தேய்­மா­னம், மூட்­ட­ழற்சி, இடுப்பு வலி, முது­கெ­லும்பு சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னை­கள் ஏற்­படும் வாய்ப்­பு­கள் அதி­கம் என்று அண்­மைய ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

கணுக்­கால், கெண்­டைக்­கால் தசை­களில் அதிக பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் ‘ஃபிரன்டியர்ஸ்’ எனும் ஆய்­வி­த­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த ஆய்­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“இளம் வய­தி­லி­ருந்தே நான் சற்று குள்­ள­மாக இருப்­ப­தால் சக மாண­வி­யர் என்­னைக் கேலி செய்­துள்­ள­னர். அத­னால் முடிந்த அளவு நான் உய­ர் குதி­கால் கால­ணி­க­ளையே அணி­கி­றேன். பல நேரங்­களில் குதி­கா­லும் கணுக்­கா­லும் வலித்­தா­லும் கூட இந்த கால­ணி­கள் பொது இடங்­களில் மிகுந்த தன்­னம்­பிக்­கையை அளிக்­கிறது,” என்­றார் பல்­க­லைக்­க­ழக மாண­வி­யான தர்­ஷினி ராஜேஷ், 20.

“அலு­வ­ல­கங்­களில் இது போன்ற கால­ணி­க­ளையே பெண்­கள் பெரும்­பா­லும் அணி­கின்­ற­னர். அலு­வ­லக உடை­யின் ஓர் அங்­க­மாக கரு­தப்­படும் உய­ர் குதி­கால்­ கா­ல­ணியை அணி­யா­விட்­டால் தனித்து தெரி­வது போன்ற உணர்வு ஏற்­ப­டு­கின்­றது. அத­னால், அலு­வ­லக வாயில் வரை வச­தி­யான கால­ணி­யை­யும் அலு­வ­ல­கத்­திற்­குள் உய­ர் குதி­கால் கால­ணி­க­ளை­யும் அணி­வதை வழக்­க­மாக வைத்­துள்­ளேன்,” என்று கூறி­னார் தனி­யார் வங்­கி­யில் மேலா­ள­ராக பணி­பு­ரி­யும் ராதிகா சிவ­பா­லன், 37.

தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் தனி­யார் நிறு­வ­னத்­தில் மென்­பொ­ருள் பொறி­யா­ள­ராக பணி­பு­ரி­யும் சந்­தியா நாரா­ய­ணன், 28 “உய­ர் குதி­கால் காலணி அணி­யும்­போது நம்­மையே அறி­யா­மல் மிடுக்­காக நடப்­போம். பார்ப்­ப­தற்கு அழ­கா­க­வும் கம்­பீ­ர­மா­க­வும் தோன்­றும். அத­னா­லேயே அதி­கம் கால்­கள் வலிக்­காத பஞ்சு பொருத்­திய உய­ர­மான கால­ணி­களை அணி­கி­றேன்“ என்று கூறி­னார்.

இது குறித்து தனி­யார் சிகிச்­சை­ய­கத்­தில் பணி­பு­ரி­யும் எலும்­பி­யல் அறுவை சிகிச்சை நிபு­ணர் ரமேஷ் சுப்­ர­ம­ணி­யம் கூறு­கை­யில், “இது­போன்ற கால­ணி­களை தொடர்ந்து அணி­வ­தால் குதி­கால், கணுக்­கால், மூட்டு, இடுப்பு, முது­கெ­லும்பு போன்ற பல்­வேறு உடல் பாகங்­கள் பாதிக்­கப்­படும். லேசான வலி­யில் ஆரம்­பிக்­கும் இந்த பாதிப்பு பல சூழல்­களில் அறுவை சிகிச்சை நிலை வரை இட்­டுச் செல்­லும்,” என்று கூறி­னார்.

மேலும் தின­மும் பல மணி நேரம் தொடர்ந்து அணி­வ­தால் பல­ருக்கு கால் விரல்­க­ளின் வடி­வமே நாள­டை­வில் மாறி­வி­டும் அபா­ய­மும் உள்­ளது.

அதி­லும் கூர்­மை­யான உய­ர் குதி­கால் கால­ணி­கள் அணி­ப­வர்­க­ளுக்கு மூட்­ட­ழற்சி, இடுப்பு எலும்பு அழற்சி போன்ற பல்­வேறு நாள்­பட்ட உடற்­கோ­ளா­று­களும் ஏற்­ப­டு­வ­துண்டு என்­றும் சொன்­னார்.

உட­லின் மொத்த எடை­யை­யும் குறு­கிய அடித்­தள வடி­வ­மு­டைய இவ்­வகை கால­ணி­கள் மீது இறங்­கு­வ­தால் பல­ருக்கு கெண்­டைக்­கால் தசை­க­ளின் நீளம் குறை­ய­வும், கணுக்­கா­லின் பின்புறத் தசை­களில் வீக்­கம் ஏற்­ப­ட­வும் அதிக வாய்ப்­பு­கள் உள்­ள­தா­க­வும் இவர் தெரி­வித்­தார்.

ஒரு­முறை உய­ர் கா­லணி அணிந்த பெண்­மணி ஒரு­வர் வாடகை வாக­னத்­தி­லி­ருந்து இறங்­கும் போது நிலை­த­டு­மாறி விழுந்­த­தால் எலும்­பு­மு­றிவு ஏற்­பட்டு அறுவை சிகிச்சை மேற்­கொண்டு பல காலம் அவ­தி­யுற்ற சம்­ப­வத்­தை­யும் திரு ரமேஷ் நினை­வு­கூர்ந்­தார்.

அண்­மைய காலங்­களில் ஆண்­களும் இது­போன்ற உய­ர­மான கால­ணி­களை அணி­கின்­ற­னர் என்­றும் தங்­க­ளு­டைய உயரத்­திற்­கும் எடைக்­கும் ஏற்ற கால­ணி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து பயன்­ப­டுத்­து­வதே சிறந்­தது என்­றும் கூறி­னார் திரு ரமேஷ்.

மேலும் கூடு­மா­ன­வரை உய­ர் குதி­கால் கால­ணி­க­ளைத் தவிர்ப்­பது நல்­லது என்­றும் ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரத்­திற்­கும் மேல் அணி­வது அதிக ஆபத்­துக்­களை ஏற்­ப­டுத்­தும் என்­றும் தெரி­வித்­தார்.

monolisa@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!