புதிய புரோட்டோன் சிகிச்சை மையம் திறப்பு

கதிர்வீச்சு சிகிச்சை முறையில் ஏற்பட்டு வந்துள்ள பல்வேறு முன்னேற்றங்கள் சிகிச்சையை மேம்படுத்தி இருப்பதுடன் பக்க விளைவுகளையும் குறைத்துள்ளன.

கரு­ணா­நிதி துர்கா

மாறி­வ­ரும் வாழ்க்­கைச் சூழ­ல், உணவு முறைகள், மாசு­பட்ட சுற்­றுச்­சூ­ழ­ல் போன்றவற்றால் உலக அள­வில் புற்­று­நோய்ப் பாதிப்பு ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்து வரு­கிறது. எனினும் இன்­றைய நவீன தொழில்­நுட்­பம், புற்­று­நோய்க்­குத் தரப்­படும் கதிர்­வீச்சு சிகிச்­சை­யில் புதிய முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதில் அதிநவீனமான சிகிச்சை முறையாக ‘புரோட்டோன் சிகிச்சை’ முறை உள்ளது.

மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா மருத்­து­வ­ம­னை­யில் மேம்­பட்ட புற்­று­நோய் சிகிச்சை வழங்க ஏது­வாக $78 மில்­லி­யன் செல­வில் புதிய புரோட்­டோன் சிகிச்சை மையம் திறக்­கப்­ப­ட­வுள்­ளது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் புரோட்­டோன் சிகிச்சை மையம் கொண்­டுள்ள முதல் மருத்­த­வ­மனை இது.

இந்த புதிய வச­தி­யின் மூலம் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட அனைத்து வயது நோயா­ளி­களுக்­கும் மேம்­பட்ட சிகிச்சை வழங்க முடி­யும்.

இதற்கு முன்­னர், புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் பெரும்­பா­லா­னோர் புரோட்­டோன் சிகிச்­சைக்­காக வெளி­நா­டு­களுக்குச் சென்­ற­னர்.

கதிர்­வீச்சு சிகிச்­சை­யின் மிக­வும் மேம்­பட்ட வடி­வங்­களில் ஒன்­றான புரோட்டோன் சிகிச்­சை­யானது, கட்­டி­களை மிக­வும் துல்லி­ய­மாகத் தாக்­கு­கிறது. சுற்றியுள்ள ஆரோக்­கி­ய­மான திசுக்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்பைக் குறைக்­கிறது.

மூளை, கண்­கள் போன்ற இடங்­களில் ஏற்­படும் கட்­டி­களை அதிக துல்­லி­யத்­து­டன் கண்­ட­றிந்து அவற்­றுக்­கான சிகிச்சை செய்­வதை சுல­ப­மாக்­கு­கிறது இவ்­வ­சதி.

இச்­சி­கிச்­சை­யில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் உள்ள புற்­று­நோய் உயி­ர­ணுக்­கள் மட்­டும் அழிக்­கப்­ப­டு­வ­தால், ஆரோக்­கி­ய­மான திசுக்­கள், உறுப்­பு­க­ளுக்கு எந்த பாதிப்­பும் ஏற்­ப­டாது.

புரோட்­டோன் சிகிச்­சை­யினால் புற்­று­நோய் சிகிச்­சைக்­கான பக்க விளை­வு­கள் குறை­யும்.

“சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்­லா­மல் உல­க­ள­வி­லும் மர­ணத்­திற்­கான முக்­கிய கார­ண­மாக அமை­கின்­றது புற்­று­நோய். புற்­று­நோய் மன­த­ள­வி­லும் உட­ல­ள­வி­லும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கிறது. இந்த புரோட்­டோன் சிகிச்சை மையம் இப்­பா­திப்­பு­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கத்­தில் உள்­ளது,” என்று மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா மருத்­து­வ­ம­னை­யின் தலைமை நிர்­வாக அதி­காரி டாக்­டர் பீட்­டர் சாவ் கூறி­னார்.

“மேம்­பட்ட புற்­று­நோய் சிகிச்சை வச­தியை இங்கு வழங்க முடி­வ­தில் நாங்­கள் பெருமை கொள்­கி­றோம். புற்­று­நோய்க்கு எதி­ரான போராட்­டத்­தில் நோயா­ளி­கள் தனி­யாக இல்லை என்­பதை வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன்,” என்று ‘ஐஎச்­எச் ஹெல்த்­கெர்’யின் தலைமை நிர்­வாக அதி­காரி டாக்­டர் பிரேம் குமார் நாயர் கூறி­னார்.

dhurga@sph.com.sg

கதிர்­வீச்சு சிகிச்சை

எக்ஸ்-ரே கரு­வி­யின் துணை­யு­டன் கதிர்­வீச்­சுப் பொருள்­களை உட­லுக்­குள் அனுப்­பிப் புற்­று­நோய்த் தாக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் வழி­மு­றையே கதிர்­வீச்சு சிகிச்சை (ரேடி­யோ­தெ­ரபி).

மனித உட­லில் நேரடி விளை­வை­யும் மறை­முக விளை­வை­யும் இந்­தக் கதிர்­வீச்சு ஏற்­ப­டுத்­து­கிறது. நேரடி விளை­வாக, உடல் திசுக்­க­ளின் மர­ப­ணுக்­கூ­று­கள் (டிஎன்ஏ) அழி­கின்­றன. மறை­முக விளை­வாக புற்­று­நோய் செல்­கள் அழி­கின்­றன. புற்­று­நோய் அணுக் கள் மீண்­டும் உற்­பத்­தி­யா­கா­மல் பார்த்­துக் கொள்­வதே கதிர்­வீச்சு சிகிச்­சை­யின் முக்­கிய நோக்­கம்.

கதிர்­வீச்­சில் வெளிக்­க­திர் வீச்சு, உட்­க­திர் வீச்சு என இரு உட்­பி­ரி­வு­கள் உண்டு.

வெளிப்­பு­றத்­தி­லி­ருந்து தோல் வழி­யாக நோயா­ளி­யின் உட­லுக்­குள் கதிர்­க­ளைச் செலுத்தி, புற்று­நோய் அணுக்­களை அழிப்­பதே வெளிக்­க­திர் வீச்சு.

உட்­க­திர் வீச்சு சிகிச்சையில் கதிர்­வீச்சு தோல் வழி­யா­கச் செல்­வ­தில்லை. பெரும்­பா­லும் குறிப்­பிட்ட அள­வுக்கு வெளிக்­க­திர் வீச்சு கொடுக்­கப்­பட்ட பிறகு, உட்­க­திர் வீச்சு தரப்­ப­டு­கிறது. உதா­ர­ணம், உண­வுக்­கு­ழாய்ப் புற்று, கருப்­பை­வாய்ப் புற்று.

புதிய கதிர்­வீச்சு முறை­கள்

பழைய முறை கதிர்­வீச்சு சிகிச்­சையை ‘2டி ரேடி­யோ­தெ­ரபி’ என்­பார்­கள். இதில் அதிக அளவு கதிர்­வீச்­சைத் தர­வேண்டி இருந்­தது. அது புற்­றுள்ள இடத்­தின் அரு­கில் இருக்­கும் திசுக்­க­ளை­யும் அழித்­தது. அத­னால் நோயா­ளிக்கு வாயில் புண் ஏற்­ப­டு­வது, தலை­முடி உதிர்­வது போன்ற பல பக்க விளை­வு­கள் ஏற்­பட்­டன.

இதைத் தவிர்க்க ‘3டி கன்­ஃபார்­மல் ரேடி­யோ­தெ­ரபி’ வந்தது. இந்த சிகிச்சை முறை­யில் சி.டி. ஸ்கேன் மூலம் நோயுள்ள இடத்தை முப்­ப­ரி­மா­ணத்­தில் பட­மெ­டுத்­துக்­கொண்டு, கணினி உத­வி­யு­டன் நோய்க்­குத் தகுந்­த­வாறு கதிர்­வீச்­சின் அள­வைக் கணக்­கிட்டு, புற்­றுள்ள இடத்தை மட்­டும் தாக்கி அழிக்­கும் வகை­யி­லும் அரு­கில் உள்ள ஆரோக்­கிய உறுப்­பு­க­ளைத் தவிர்க்­கும் வகை­யி­லும் சிகிச்சை வடி­வ­மைக்­கப்­பட்­டது. இதில் பக்­க­வி­ளை­வு­கள் குறைந்­தன என்­றா­லும் முழு­வ­து­மா­கத் தவிர்க்க முடி­ய­வில்லை.

நவீ­ன கதிர்­வீச்சு முறை­யில் பல­வி­தம் உள்­ளன.

‘கோன் பீம் சிடி’ எனும் பிரத்­தி­யேக ஸ்கேன் துணை­யு­டன் நோயுள்ள இடத்தை நேர­டி­யா­கப் பார்த்­துக்­கொண்டே கதிர்­வீச்சு தரப்­படும் ‘ஐஜி­ஆர்டி’ சிகிச்சை, மிக­வும் அதிக அள­வில் கதிர்­வீச்சு தேவைப்­படும் புற்­று­நோய்­க­ளுக்கு ‘சைபர் நைஃப்’ எனும் கருவி கொண்டு அளிக்­கப்­படும் ‘எஸ்­பி­ஆர்டி’ சிகிச்சை போன்ற நவீன கதிர்­வீச்சு சிகிச்சை முறை­களும் உண்டு.

புரோட்­டோன் சிகிச்சை

‘புரோட்­டோன் சிகிச்சை’ என்­பது அதி­ந­வீ­ன­மா­னது. ‘புரோட்­டோன் பீம்’ எனப்­படும் கரு­வி­கொண்டு இந்­தக் கதிர்­கள் வெளி­யேற்­றப்படு­கின்­றன.

இவை பென்­சில் முனை போன்று மிகக் கூர்­மை­யா­கப் புற்­றுள்ள இடத்தை மட்­டுமே தாக்கி அழிக்­கக்கூடி­யவை. இவற்­றின் பய­ணப்­பா­தை­யில் முன்­னும் பின்­னும் உள்ள மற்ற நல்ல உறுப்­பு­களும் நரம்­பு­களும் துளி­யும் தாக்­கப்­ப­டா­மல் தப்­பித்­து­வி­டு­கின்­றன. அதே­வே­ளை­யில் புற்­றுள்ள பகுதி மிகத் துல்­லி­ய­மா­க­வும் முழு­வ­து­மா­க­வும் அழிக்­கப்­ப­டு­கிறது. நோய் நன்கு கட்­டுப்­ப­டு­கிறது.

கூடு­தல் நன்­மை­கள்

நுரை­யீ­ரல், குடல், கண், கணை­யம், மார்­ப­கம், புராஸ்­டேட், மூளை, தண்­டு­வ­டம், முகத்­தில் உள்ள சைனஸ் அறை­கள் போன்ற இடங்­களில் உரு­வா­கும் புற்­று­நோய்­க­ளுக்கு புரோட்­டான் சிகிச்சை சிறந்த பல­னைத் தரு­கிறது. குழந்­தை­க­ளுக்கு ஏற்­படும் புற்­று­நோய்­க­ளுக்­கும் இது பயன்­படு­கிறது.

புற்­று­நோய்க் கட்­டி­க­ளுக்கு மட்­டு­மன்றி, சாதா­ரண வகைக் கட்­டி­க­ளுக்­கும் இது நல்ல பல­னைத் தரு­கிறது. கதிர்­வீச்சு சிகிச்­சை­யின் பக்கவிளை­வாக வரக்­கூ­டிய இரண்­டாம் நிலைப் புற்­று­நோய் வரு­வ­தும் இதில் தடுக்­கப்­ப­டு­கிறது.

மேலும், புரோட்­டோன் சிகிச்­சை­யில் குறை­வான அமர்­வு­களே போது­மா­னது.

மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, கதிர்­வீச்சு சிகிச்சை, போன்­றவை புற்­று­நோயை மட்டுப்­ப­டுத்­து­கின்­றன. முழு­மை­யா­க­வும் களை­கின்­றன புற்­று­நோ­யின் வகை, இடம், நிலை ஆகி­ய­வற்­றைப் பொறுத்து இந்த சிகிச்­சை­கள் நோயா­ளி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!