விருந்தோம்பல் போற்றும் செட்டி மலாக்கா சமூகம்

வர­லாறு சார்ந்த ஆய்­வு­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் தேசிய நூலக வாரி­யத்­தின் ‘வர­லா­று­கள்’ என்ற நிகழ்ச்­சித் தொட­ரின் ஓர் அங்­க­மாக செட்டி மலாக்கா பற்­றிய உரை இடம்­பெற்­றது.

சென்ற மே 23ஆம் தேதி­யன்று இணை­யம்­வழி நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சியை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் மூத்த செய்­தி­யா­ள­ரான சந்­தல் சஜன் வழி­ந­டத்­தி­னார். 1984யிலி­ருந்து செய்தி பக்­கங்­களை வடி­வ­மைத்து வரும் இவர் 2020ல் ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் லைஃப்’ பகு­தி­யின் எழுத்­தா­ள­ராக உள்­ளார்.

செட்டி மலாக்கா சமூ­கத்­தைச் சேர்ந்த அவர், தனது குடும்ப, சமூக பண்­பாட்டு முறை­க­ளைப் பற்றி விவ­ரித்­தார்.

தமது சமூ­கத்­தின் சிறப்பு குண­ந­லன்­க­ளை­யும் பழக்­க­வ­ழக்­கங்­க­ளை­யும் விவ­ரித்த அவர், அச்­ச­மூ­கத்­தின் விருந்­தோம்­பல் முறை­களை பற்­றி­யும் விருந்­தா­ளி­க­ளுக்கு இனிப்­பான ரோஜா நீர், மலாய் குவே வழங்­கு­வதை நினை­வு­கூர்ந்­தார்.

‘அதிதி தேவோ பவ’ என்ற சமஸ்­கி­ருத கூற்றை மைய­மாக கொண்­டுள்­ளது செட்டி மலாக்க பண்­பாடு. இக்­கூற்­றின் முக்­கியத்து­வத்தை வலி­யு­றுத்­திப் பேசி­னார் சந்­தல் சஜன்.

வீட்­டிற்கு வரும் விருந்­தா­ளி­களை கட­வு­ளுக்கு ஈடாக நடத்த வேண்­டும் என்­பதே இக்­கூற்­றின் அர்த்­தம்.

செட்டி மலாக்கா சமூ­கம் பற்றி நூல் எழு­தி­வ­ரும் இவர், தனது குடும்­பம் எவ்­வாறு மலாய் நடை­மு­றை­க­ளு­டன் இந்­திய நடை­மு­றை­க­ளை­யும் பின்­பற்­று­கிறது என்­ப­தைப் பற்றி விரி­வாக பேசி­னார்.

அரு­கி­வ­ரும் செட்டி மலாக்கா பண்­பாட்டை பற்றி அறிந்­து­கொள்ள அவ­ரது உரை உதவியது.

செய்தி: கரு­ந­ணா­நிதி துர்க்கா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!