சின்ன சின்ன வழிகளில் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்

சின்ன சின்ன வழிகளில் எரிவாயுவை மிச்சப்படுத்தலாம்

1 mins read

 சமை­ய­லைத் தொடங்­கு­வ­தற்கு முன்­பா­கவே காய்­க­றி­களை வெட்டி, சமைப்­ப­தற்­குத் தேவை யான பாத்­தி­ரங்­கள், பொருள் களைத் தயா­ராக வைத்­துக் கொள்­ள­வும். அடுப்­பில் பாத் திரத்தை வைத்­து­விட்டு ஒவ்­வொரு பொருள்­க­ளா­கத் தேடித் தேடி எடுத்­துப் போடு­வ­தன் மூலம் சமை­யல் எரி­வாயு அதி­கம் செல­வா­கும்.

 சமைக்­கும்­போது மூடி­வைத்து சமைக்­க­வேண்­டும். ஈர­மான பாத்­தி­ரங்­க­ளைத் தவிர்க்­க­வும்.

 சமைப்­ப­தற்கு முன்­ன­தாக அரிசி, பருப்பு, பயறு வகை­களை சற்று நேரம் ஊற­வைத்து சமைத் தால் சீக்­கி­ரம் வெந்­து­வி­டும். இதனால் எரி­வாயு மிச்­ச­மா­கும்.