சாதனை முறியடிப்பை வழக்கமாக்கிய சாந்தி

2 mins read
f0b2031b-f80c-4710-948b-98325a173755
-

100 மீ. ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை

திடல்­தட விளை­யாட்­டுப் போட்­டி­களில் நாளுக்கு நாள் புதுப்­புது உச்­சங்­க­ளைத் தொட்டு வரு­கிறார் சிங்­கப்­பூர் நட்­சத்­தி­ரம் சாந்தி பெரேரா, 26.

இவ்­வாண்டு ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து நாடு­களில் நடந்த போட்­டி­க­ளி­லும் பின்­னர் கம்­போ­டி­யா­வில் நடந்த தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளி­லும் 200 மீட்­டர், 100 மீட்­டர் ஓட்­டப் பந்­த­யங்­களில் பல்­வேறு சாத­னை­களை சாந்தி முறி­ய­டித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இப்­போது ஐரோப்­பா­வி­லும் தமது சாதனை முறி­ய­டிப்­புப் பய­ணத்­தைத் தொடர்ந்து தம்­மையே வியப்­பில் ஆழ்த்­தி­னார் சாந்தி.

ஜெர்­ம­னி­யின் ரேலிங்­க­னில் நேற்று முன்­தி­னம் நடந்த 100 மீ. ஓட்­டப் பந்­த­யத்தை 11.26 நொடி­களில் முடித்து, தமது சொந்த தேசிய சாத­னையை இவர் முறி­ய­டித்­தார்.

சாந்தி ஒரே நாளில் இரண்டு முறை 100 மீ. ஓட்­டத்­தில் புதிய சாதனை படைத்­தது குறிப்­பி­டத்­தக்­கது. முன்­ன­தாக, அதே நாளில் நடந்த 100 மீ. தகு­திச்­சுற்றை 11.34 நொடி­களில் அவர் முடித்­தி­ருந்­தார்.

இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பிரிஸ்­பனில் நடந்த போட்­டி­யில் 11.37 நொடி­களில் இவர் நூறு மீட்­டர் தொலை­வைக் கடந்­தி­ருந்­தார்.

கடந்த மார்ச் மாதத்­தி­லி­ருந்து 100 மீட்­ட­ரில் ஐந்து முறை­யும் 200 மீட்­ட­ரில் மூன்று முறை­யும் இவர் தமது சொந்த சாத­னை­களை முறி­ய­டித்­துள்­ளார்.

"எனக்கே வியப்­பாக இருக்­கிறது. ஆயி­னும், நான் விரும்­பி­ய­தைச் செய்­து­காட்­டி­ய­தால் மிக்க மகிழ்ச்சி அடைந்­துள்­ளேன்," என்று தொலை­பேசி வழி­யாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் சாந்தி கூறி­னார்.

அடுத்­த­தாக சுவிட்­சர்­லாந்­தி­லும் பிரான்­சி­லும் நடக்­க­வுள்ள போட்­டி­களில் இவர் கலந்­து­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

பின்­னர் ஜூன் 21ஆம் தேதி சிங்­கப்­பூர் திரும்­பும் சாந்தி, ஜூலை 12-16 தேதி­களில் நடக்­கும் ஆசி­யத் திடல்­தட வெற்­றி­யா­ளர் போட்­டி­க­ளி­லும் செப்­டம்­பர் 23ஆம் தேதி தொடங்­கும் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களி­லும் பங்­கேற்­க­வுள்­ளார்.