கடைசி நாளில் தப்பித்த எவர்ட்டன்; 69 ஆண்டுப் பயணம் நீடிப்பு

கடைசி நாளில் தப்பித்த எவர்ட்டன்; 69 ஆண்டுப் பயணம் நீடிப்பு

2 mins read
7b98662b-d3df-4fc5-8cc9-f99bca15d3fa
-
multi-img1 of 2

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் இருந்து வெளி­யேற்­றப்­படு­வ­தைத் தவிர்த்து, தொடர்ந்து 70வது ஆண்­டாக அந்த லீக்­கில் விளை­யா­ட­வி­ருப்­பதை உறு­தி­செய்­தது எவர்ட்­டன் காற்­பந்­துக் குழு.

இந்­தப் பரு­வத்­தில் போர்ன்­மத் குழு­விற்கு எதி­ரான கடைசி ஆட்­டமே எவர்ட்­ட­னின் தலை­வி­தி­யைத் தீர்­மா­னிப்­ப­தாக அமைந்­தது. அந்த ஆட்­டத்­தின் 57வது நிமி­டத்­தில் அப்­து­லாயி டூக்­கூரே அடித்த கோல், எவர்ட்­ட­னின் வெற்றி கோலாக அமைந்­தது.

இதன்­மூ­லம் 'ரெலி­கே­ஷன்' எனப்­படும் தகு­தி­யி­ழப்பு நிலை­யில் இருந்து அக்­குழு தப்­பித்து, 36 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லின் 17ஆம் நிலை­யு­டன் இப்­ப­ரு­வத்தை முடித்­தது எவர்ட்­டன்.

எவர்ட்­டன் குழு கடைசி நாள் வரை­யி­லும் இத்­த­கைய பதற்­றத்தை எதிர்­கொண்­டது இது முதன்­மு­றை­யன்று. 1990களி­லும் இப்­படி இரு­முறை கடைசி நாள்­வரை சென்று, தகு­தி­யி­ழப்­பில் இருந்து அக்­குழு தப்­பி­யுள்­ளது.

"அடுத்த பரு­வத்­தி­லும் நீடிக்க வேண்­டும் என்­ப­து­தான் முதல் குறிக்­கோ­ளாக இருந்­தது. அதனை எட்­டி­விட்­டோம். இனி அடுத்த பரு­வத்­தில் கவ­னம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­யம். நிர்­வா­கி­யாக நான் பொறுப்­பேற்ற முதல் நாளே அதற்­கான பணி­யைத் தொடங்­கி­விட்­டேன். பெரும்­ப­ணி­யைச் செய்ய வேண்­டி­யுள்­ளது," என்­றார் எவர்ட்­டன் நிர்­வாகி ஷான் டைக்.

ஒன்­பது முறை பிரி­மி­யர் லீக் வெற்­றி­யா­ள­ரான எவர்ட்­டன், கடந்த 2021/22 பரு­வத்தை 16ஆம் நிலை­யில் முடித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

அத­னால், இம்­மு­றை­யும் போராடி தகு­தி­யி­ழப்­பில் இருந்து தப்­பித்­தது நிம்­மதி அளித்­தா­லும் கடந்த இரண்டு பரு­வங்­க­ளி­லும் தனது செயல்­பாடு எவர்ட்­ட­னுக்கு மகிழ்ச்சி அளித்­தி­ருக்­காது.

வென்­றும் பய­னில்லை

இத­னி­டையே, வெஸ்ட் ஹேம் யுனை­டெட் குழுவை 2-1 என்ற கோல் கணக்­கில் வீழ்த்­தி­ய­போ­தும் பிரி­மி­யர் லீக்­கில் இருந்து வெளி­யே­று­வதை லெஸ்­டர் சிட்டி குழு­வால் தவிர்க்க முடி­ய­வில்லை.

இந்­தப் பரு­வத்­தில் கடைசி எட்டு ஆட்­டங்­கள் இருந்­த­போ­து­தான் லெஸ்­டர் நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்­றார் டீன் ஸ்மித். ஆனா­லும், அக்­கு­ழுவை அவ­ரால் கரை­சேர்க்க இய­ல­வில்லை.

இம்­முறை 18ஆம் இடத்­தில் முடித்த லெஸ்­டர் குழு­வின் செயல்­பாடு மறு­ஆய்­விற்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்­றும் பல மாற்­றங்­கள் இடம்­பெ­ற­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஸ்மித் பத­வி­யில் நீடிப்­பாரா என்­ப­தும் உறு­தி­யில்லை.

"இப்­போ­தைக்கு அத­னைப் பற்றி கேள்­வி­யில்லை. நானும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது," என்­றார் ஸ்மித்.

இதற்­கி­டையே, டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் குழு­வி­டம் 4-1 என்ற கோல் கணக்­கில் தோற்­றுப்­போனது லீட்ஸ் யுனை­டெட் குழு. இதன்­மூ­லம் பட்­டி­ய­லின் கடைசி இரண்­டா­மி­டத்­தைப் பிடித்த அக்­கு­ழு­வும் அடுத்த பருவ லீக்­கில் விளை­யா­டும் தகு­தியை இழந்­தது.

சௌத்­ஹேம்­டன் குழு ஏற்­கெ­னவே வெளி­யே­றி­விட்ட நிலை­யில், அடுத்த பரு­வத்­தில் பர்ன்லி, லூட்­டன் டவுன், ஷெஃபீல்டு யுனை­டெட் ஆகிய மூன்று குழுக்­களும் பிரி­மி­யர் லீக்­கில் விளை­யா­டத் தகு­தி­பெற்­றுள்­ளன.