தொடக்கமே அமோகம், இறுதியிலும் விவேகம்

தொடக்கமே அமோகம், இறுதியிலும் விவேகம்

1 mins read
195718a4-f725-4e49-8d5f-397bc8a5df52
-
multi-img1 of 2

மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு­விற்­கா­கத் தான் விளை­யா­டிய முதல் பரு­வத்­தி­லேயே முத்­திரை பதித்­துள்­ளார் நார்வே ஆட்­டக்­கா­ரர் எர்­லிங் ஹாலண்ட்.

இந்­தப் பருவ இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் ஆக அதி­க­மாக 36 கோல்­க­ளைப் போட்­ட­தன் மூலம் தங்­கக் காலணி விருதை 22 வயது ஹாலண்ட் தட்­டிச் சென்­றார்.

அத்­து­டன், பிரி­மி­யர் லீக்­கின் ஒரே பரு­வத்­தில் அதிக கோல்­களை அடித்­த­வர் என்ற பெரு­மை­யை­யும் இவர் பெற்­றார்.

இத­னி­டையே, கடந்த 2015ஆம் ஆண்டு லிவர்­பூல் குழு­வு­டன் இணைந்த பிரே­சி­லின் ரொபர்ட்டோ ஃபிர்மினோ அக்­கு­ழு­வு­ட­னான தமது பய­ணத்தை முடித்­துக்­கொண்­டார்.

சௌத்­ஹேம்­டன் - லிவர்­பூல் குழுக்­கள் நேற்று முன்­தி­னம் மோதிய ஆட்­டத்­தில் தரப்­பிற்கு நான்கு கோல்­கள் விழுந்­தன.

லிவர்­பூல் சார்­பில் தமது கடைசி ஆட்­டத்­தி­லும் ஒரு கோல­டித்து, சாதித்த மகிழ்ச்­சி­யு­டன் விடை­பெற்­றார் 31 வய­தான ஃபிர்மினோ. லிவர்­பூ­லுக்­காக 256 ஆட்­டங்­களில் விளை­யாடி 82 கோல்­களை அடித்­துள்­ளார் இவர்.