முதன்முறையாக ஐரோப்பியக் காற்பந்தில் விளையாடும் பிரைட்டன்

முதன்முறையாக ஐரோப்பியக் காற்பந்தில் விளையாடும் பிரைட்டன்

1 mins read

லண்­டன்: தனது 121 ஆண்­டு­கால வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக ஐரோப்­பி­யக் காற்­பந்­தில் விளை­யா­டத் தகு­தி­பெற்­றுள்­ளது பிரைட்­டன் அண்ட் ஹோவ் அல்­பி­யான் காற்­பந்­துக் குழு.

இம்­மா­தம் 21ஆம் தேதி நடந்த ஆட்­டத்­தில் சௌத்­ஹேம்­டனை 3-1 என்ற கோல் கணக்­கில் வீழ்த்­தி­ய­போதே பட்­டி­ய­லின் முதல் ஏழு இடங்­க­ளுக்­குள் வரு­வதை பிரைட்­டன் குழு உறு­திப்­படுத்­திக்­கொண்­டது.

பரு­வத்­தின் கடைசி நாளான நேற்று முன்­தி­னம் ஆஸ்­டன் வில்லா குழு­வி­டம் 2-1 என்ற கோல் கணக்­கில் பிரைட்­டன் தோற்­றுப்­போ­னது. ஆயி­னும், 62 புள்­ளி­க­ளு­டன் பட்­டி­ய­லில் ஆறா­மி­டத்­தைப் பிடித்த அக்­குழு அடுத்த பரு­வத்­திற்­கான யூயேஃபா கிண்­ணத்­தில் விளை­யா­டும்.

அதே­போல, ஆஸ்­டன் வில்லா குழு 2022/23 பரு­வத்­திற்­கான ஐரோப்­பிய கான்­ஃப­ரன்ஸ் லீக்­கில் விளை­யா­டத் தகு­தி­பெற்­றுள்­ளது.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் புள்­ளிப் பட்­டி­ய­லில் முதல் நான்கு இடங்­க­ளைப் பிடித்த மான்­செஸ்­டர் சிட்டி, ஆர்­ச­னல், மான்­செஸ்­டர் யுனை­டெட், நியூ­கா­சல் யுனை­டெட் ஆகிய குழுக்­கள் அடுத்த பரு­வத்­திற்­கான ஐரோப்­பிய சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்கு முன்­னே­றி­யுள்­ளன. நியூ­கா­சல் குழு சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்­குத் தகு­தி­பெற்று இருப்­பது கடந்த 20 ஆண்­டு­களில் இதுவே முதன்­முறை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­போன்று, ஆர்­ச­னல் குழு­வும் ஐந்து பரு­வங்­க­ளுக்­குப் பிறகு சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்கு முன்­னே­றி­யுள்­ளது. தனது கடைசி ஆட்­டத்­தில் அக்­குழு 5-0 என்ற கோல் கணக்­கில் உல்வ்ஸ் குழுவை வென்­றது. மாறாக, லீக் பட்­டத்­தைத் தக்­க­வைத்­துக்­கொண்ட சிட்டி 0-1 என்ற கோல் கணக்­கில் பிரென்ட்­ஃபர்ட் குழு­வி­டம் தோற்­றுப்­போ­னது.