லண்டன்: முன்னணி இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான செல்சியின் புதிய நிர்வாகியாக அர்ஜென்டினாவின் மௌரிசியோ பொக்கெட்டினோ, 51 (படம்), நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், பிஎஸ்ஜி குழுக்களின் முன்னாள் நிர்வாகியான பொக்கெட்டினோ வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து செல்சி நிர்வாகியாகச் செயல்படுவார். செல்சியுடன் இவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளார்.
அண்மைய இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் செல்சி ஆக மோசமாகச் செயல்பட்டு, 12ஆம் இடத்தைப் பிடித்தது.

