அவரவர் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்

அவரவர் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்

3 mins read
b6cda109-b982-4528-a46d-ec4eaaa733b7
-

அண்மை வாரங்­க­ளாக வெப்­ப­மான வானிலை நில­வி­வ­ரும் வேளை­யில், உங்­க­ளுக்கு தலை­வலி அல்­லது மலச்­சிக்­க­லைச் சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளதா? அப்­ப­டி­யென்­றால், நீங்­கள் போது­மான அளவு தண்­ணீர் அருந்­தா­மல் இருக்­கக்­கூ­டும். உட­லில் நீர்ச்­சத்து குறைந்து இருப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் இவை.

நாள் ஒன்­றுக்கு ஒரு­வர் எட்டு குவளை தண்­ணீர் குடிக்க வேண்­டும் என்­ப­தைப் பல­ரும் அறிந்­து இருப்­பர். எனி­னும், இந்த அளவு ஒரு­வ­ரின் அன்­றா­டத் தண்­ணீர் தேவை­யைப் பூர்த்­தி­செய்­யா­மல் போக­லாம் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

மேலும், தாக­மாக இருப்­ப­தன் அடிப்­ப­டை­யில் மட்­டும் தண்­ணீ­ரைப் பரு­கு­வது போதாது.

மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­யில் இரைப்­பைக் குடல் இயல் மருத்­து­வ­ரான டாக்­டர் லிம் லீ குவான், "உட­லில் நீர்ச்­சத்து அள­வைக் குறிப்­பி­டு­வ­தற்கு தாகம் நம்­ப­க­மான அள­வு­கோ­லாக இல்­லா­மல் போக­லாம். பல­ரும், குறிப்­பாக முதி­யோ­ருக்கு நீர்ச்­சத்து குறை­யும்­வரை அவர்­களுக்கு தாகம் ஏற்­ப­டா­மல் இருக்­க­லாம்," என்­றார்.

ஆரோக்கியத்துக்கு தண்ணீர் மிகவும் முக்கியம்

உட­லின் செயல்­பா­டு­க­ளுக்கு தண்­ணீர் முக்­கி­யம். மனித உட­ல் 60 விழுக்­கா­டு­வரை தண்­ணீரால் ஆனது என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

உணவு செரி­மா­ன­மா­வ­தற்கு, உடல் வெப்­ப­நி­லையை ஒழுங்­கு­படுத்­து­வ­தற்கு, உயி­ர­ணுக்­கள் சத்­து­க­ளை­யும் உயிர்­வா­யு­வை­யும் பெறு­வதை உறு­தி­செய்­வ­தற்கு தண்­ணீர் தேவை.

மூச்­சு­வி­டு­தல், வியர்த்­து­வி­டு­தல், சிறு­நீர் கழித்­தல் போன்­ற­வற்­றின் மூலம் ஒரு­வ­ருக்கு நீர்ச்­சத்து குறை­வ­தாக ராஃபிள்ஸ் மெடிக்­கல் மருத்­து­வர் டாக்­டர் அனிதா இளங்­கோ­வன் சொல்­கி­றார்.

"ஒரு­வ­ரின் வயது, உடல் அளவு, உடல்­நிலை, அவர் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள், வானி­லை­யைப் பொறுத்து அவ­ருக்­குத் தேவை­யான தண்­ணீர் அளவு அமை­கிறது.

"வெப்­ப­மான வானி­லை­யின்­போது, வியர்வை மூலம் உட­லில் நீர்ச்­சத்து குறை­கிறது. அதை ஈடு­செய்ய, பரிந்­து­ரைக்­கப்­படும் எட்டு குவ­ளைக்­கும் அதி­க­மாக தண்­ணீர் குடிக்க வேண்­டும்," என்­கி­றார் அவர்.

பேன்­ஏ­ஷியா சர்­ஜரி குழு­மத்­தில் சிறு­நீ­ரக மருத்­து­வ­ரான டாக்­டர் ஜே லிம், நீர்ச்­சத்து குறைந்­த­தன் கார­ண­மாக சிறு­நீ­ர­கக் கற்­கள், சிறு­நீர் பாதை நோய்த்­தொற்று உடைய நோயா­ளி­கள் பல­ரைப் பார்க்­கி­றார்.

"பெரும்­பா­லான வேளை­களில், பர­ப­ரப்­பான வேலை சூழல் கார­ண­மாக அப்­போ­தைக்கு அப்போது தண்­ணீர் பரு­கு­வதை மக்கள் மறந்­து­வி­டு­கின்­ற­னர்," என்­கி­றார் அவர்.

நீர்ச்­சத்து குறை­யா­மல் இருக்க தண்­ணீர் குடிப்­ப­தையே டாக்­டர் லிம்­மும் மற்ற மருத்­து­வர்­களும் பரிந்­து­ரைக்­கின்­ற­னர். காப்பி, தேநீர் பானங்­க­ளி­லுள்ள மர­வுப்­புச் சத்­தும் மது­வும் அடங்­கிய பானங்­க­ளைத் தவிர்க்­கு­மாறு அவர்­கள் அறி­வு­றுத்­து­கின்­ற­னர். ஏனெ­னில், அவற்­றைக் குடிப்­பதால் அடிக்­கடி சிறு­நீர் கழிக்க வேண்­டி­யி­ருப்­ப­தோடு நீர்ச்­சத்­தும் குறை­கிறது.

எவ்வளவு தண்ணீர் குடிப்பது?

பார்க்வே ஷெண்­டன் மருத்­துவ இயக்­கு­ந­ரான எட்­வின் சங், ஆண்­கள் தின­மும் மூன்று முதல் நான்கு லிட்­ட­ரும் பெண்­கள் இரண்டு முதல் மூன்று லிட்­ட­ரும் தண்­ணீர் குடிக்க வேண்­டும் என்று கூறு­கி­றார்.

ஒரு லிட்­டர் என்­பது நான்கு குவளை தண்­ணீ­ருக்கு சமம்.

வியர்த்து விடு­வ­தன் மூலம் நாள் ஒன்­றுக்கு ஒரு­வ­ருக்கு 10 லிட்­டர் வரை தண்­ணீர் அளவு குறை­யக்­கூ­டும்.

அறு­பது கிலோ எடை­யுள்ள ஒரு­வ­ருக்கு தின­மும் குறைந்­தது 1.8 முதல் 2.4 லிட்­டர் தண்­ணீர் வரை தேவைப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இதய செய­லிழப்பு, சிறு­நீ­ரக செய­லி­ழப்பு, கல்­லீ­ரல் செய­லி­ழப்பு போன்ற மருத்­து­வப் பிரச்­சினை உடை­யோர், எவ்­வ­ளவு தண்­ணீர் பருக வேண்­டும் என்­பது குறித்து மருத்­து­வர்­க­ளி­டம் ஆலோ­சிக்க வேண்­டும்.

ஏனெ­னில், உட­லில் மித­மிஞ்­சிய தண்­ணீர் சேரும் நிலை ஏற்­ப­டக்­கூ­டும்.