புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் 30ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்ற சனிக்கிழமை மே 27ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியர் நற்பணிச் செயற்குழு, சிண்டா, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, பல இன, சமய நன்னம்பிக்கை வட்டம் (ஐஆர்சிசி) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் 85 வயதுள்ள மூத்த குடிமக்களான இந்திய, சீன, மலாய் அன்னையர்கள் கிரீடம் சூட்டி சிறப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. ஆடல், பாடல், விளையாட்டு போன்ற அங்கங்களும் இடம்பெற்றன. அன்னையர் தங்களின் அன்னை குறித்த நினைவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.