விசாக தினக் கொண்டாட்டம்

1 mins read
52468216-0db0-42fe-9091-8640bb0704fb
-

விசாக தினம் உல­கம் முழு­வ­தும் இன்று விமரிசையா­கக் கொண்­டா­டப்படு­கிறது. புத்­த­ரின் பிறப்பு, ஞானம் பெற்­றது, வீடு­பேறு அடைந்­தது ஆகி­ய­வற்றை இந்­நாள் குறிக்­கிறது. பௌத்­தர்­கள் பௌத்த ஆல­யங்­களில் சென்று சிறப்பு வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வது வழக்கம்.

இந்­நா­ளில் செய்­யப்­படும் நற்­செ­யல்­கள் பன்­ம­டங்காக பல்கிப் பெரு­கும் என்பது பௌத்த சமயத்தவரின் நம்பிக்கையாக உள்ளது. ஆகவே, இந்­நன்­னா­ளில் நாம் மற்­ற­வர்­க­ளுக்­கும் நமக்­கும் நன்மை அளிக்­கக்­கூ­டிய நற்­செ­யல்­களில் நம்மை அர்­ப்ப­ணித்­துக்கொள்­ளு­தல் அவசியம்.

புத்தர் சிலையின் மேல் நீர் ஊற்றி தங்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்வழிப்படுத்தும்படி புத்த மகானிடம் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

விசாக தினத்தன்று கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள், விலங்குகளை விடுவிப்பதும் வழக்கம். சிலர் ஆமைகளை நீரில் மிதக்க விடுவர். தாமரைப் பூக்களைக் கொண்டுசென்றும் வழிபாடு நடத்துவர்.