சாமானியர்களின் புஷ்பக விமானம்

இன்று உலக மிதிவண்டி தினம்

உலக அள­வில் அன்­னை­யர் தினம், தந்­தை­யர் தினம், மக­ளிர் தினம் என்­றெல்­லாம் கொண்­டா­டப்­ப­டு­வதுபோல ஆண்­டு­தோ­றும் ஜூன் 3ஆம் தேதி ‘உலக சைக்­கிள் தினம்’ கொண்­டா­டப்­

ப­டு­கிறது.

சைக்­கி­ளைத் தமி­ழில் மிதி­வண்டி அல்­லது ஈருருளி என்று அழைக்­கின்­ற­னர். வறி­ய­வர்­க­ளைத் தவிர அனை­வ­ரா­லும் வாங்­கக்­கூ­டிய, எரி­பொ­ருள் தேவைப்­ப­டாத வாக­னம் சைக்­கிள்.

சைக்­கிளை யார் கண்­டு­பி­டித்­தார்­கள், எந்த நாடு முத­லில் என்­ப­தெல்­லாம் இன்­றும் கூட சர்ச்­சைக்­கு­ரிய வாதங்­க­ளா­கவே இருக்­கின்­றன. சக்­க­ரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­து­தான் தொழில் புரட்­சிக்கே முன்­னோடி என்­பார்­கள். சைக்­கிள் என்­பது அந்த சக்­க­ரத்­தையே மைய­மா­கக் கொண்டு உரு­வா­னது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­பு­வரை நம் வாழ்க்­கை­யில் இரண்­ட­றக் கலந்­தி­ருந்த ஒரு பொருள் சைக்­கிள். ஏழை, பணக்­கா­ரன் என்ற வேறு­பா­டு­க­ளின்றி, எல்­லோ­ரும் தின­மும் சைக்­கி­ளில்­தான் பய­ணம் செய்து கொண்­டி­ருந்­தார்­கள்.

சைக்­கிள் பய­ணம் செல­வில்­லா­தது என்­பது ஒரு­பு­றம் இருக்க, மிகச்­சி­றந்த உடற்­ப­யிற்­சி­யா­க­வும் அது இருந்­தது. வய­தா­ன­வர்­கள்­கூட நெடுந்­தூ­ரம் சைக்­கிளை மிதித்­துக்­கொண்டு சென்று வரு­வார்­கள். எரி­பொ­ருள் நிரப்­பக்­

கூ­டிய வாக­னங்­க­ளின் வரு­கை­யால் சைக்­கி­ளின் பயன்­பாடு குறைந்து போனது.

உடற்­ப­யிற்­சியே இல்­லாத வாழ்க்­கை­முறை, உண­வுப்­ப­ழக்­கத்­தில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள் கார­ண­மாக உடல், நோய்­க­ளின் கூடா­ர­மாக மாறி­வ­ரு­கிறது.

சைக்­கிளைப் பயன்­ப­டுத்­து­வது, ‘சுற்­றுச்­சூ­ழ­லைக் காக்­கும் என்­பது ஒரு­பு­றம் இருக்க,

அத­னால் உட­லுக்கு பல்­வேறு நன்­மை­கள் கிடைக்­கும்’ என்­கி­றார்­கள் மருத்­து­வர்­கள். சைக்­கிள் ஓட்­டு­வ­தால் ஏற்­படும் பத்து நன்­மை­களை வரி­சைப்­ப­டுத்­து­கி­றார் பிசி­யோ­தெ­ர­பிஸ்ட் ஸ்ரீநாத்.

சைக்­கிள் ஓட்­டும்­போது, இத­யத்­து­டிப்பு சீரா­கும். வயது முதிர்வு கார­ண­மாக ஏற்­படும் இதய வலு­வி­ழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்­சி­னை­கள் தடுக்­கப்­படும்.

சர்க்­கரை நோயா­ளி­க­ளுக்கு ரத்தத்தில் சர்க்­க­ரை­யின் அளவு கட்­டுக்­குள் இருக்­கும்.

தின­மும் அரை மணி நேரம் சைக்­கிள் ஓட்­டி­னால், மூளை­யின் செயல்­பா­டு­கள் அதி­க­ரித்­துச் சுறு­சு­றுப்பு உண்­டா­கும்.

சைக்­கிள் ஓட்­டு­வ­தால் கால் தசை­கள், தொடைப்­ப­குதி தசை­கள், எலும்­புப் பகு­தி­கள், முது­குத் தண்­டு­வ­டம், இடுப்­புப் பகுதி போன்­றவை வலி­மை­பெ­றும்.

ரத்த அழுத்­தம் தொடர்­பான பிரச்­சி­னை­கள் வராது.

உடல் எடை­யைக் குறைக்க உத­வும்.

சைக்­கிள் ஓட்­டு­ப­வர்­க­ளது மூளை­யின் செயல்­தி­றன் அதி­க­ரித்து மன­த­ள­வில் புத்­து­ணர்ச்சி கிடைக்­கும்.

மன­அ­ழுத்­தம், மனச்­சோர்வு போன்ற பிரச்­சி­னை­கள் இருப்­ப­வர்­க­ளுக்கு சிறந்த தீர்வு கிடைக்­கும்.

அதிக வியர்வை வெளிப்­ப­டு­வ­தால், உட­லி­லுள்ள கெட்ட கொழுப்­பு­கள் குறை­யும்.

மார்­ப­கப் புற்­று­நோய், கர்ப்­பப்பை வாய் புற்­று­நோய் போன்­று­வற்­றுக்­கான முக்­கி­ய­மான காரணி, உடல்­ப­ரு­மன். சைக்­கிள் ஓட்­டு­வ­தன்­மூ­லம் உடல்­ப­ரு­மன் தடுக்­கப்­ப­டு­வ­து­டன் புற்­று­நோய் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களும் குறை­கிறது. ஸ்காட்­லாந்­தில் உள்ள ‘க்ளாஸ்­கௌவ்’ பல்­க­லைக்­க­ழ­கம் நடத்­திய ஆய்­வில், தின­மும் அலு­வ­ல­கத்­துக்கு சைக்­கி­ளில் செல்­ப­வர்­க­ளுக்கு 45 விழுக்­காடு புற்­று­நோய் வரா­மல் தடுக்­கப்­ப­டு­வ­தாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்றைய காலகட்டத்தில் மீண்­டும் சைக்­கிள் மீது இளம் தலை­மு­றை­யின் கவ­னம் திரும்­பி­யி­ருக்­கிறது. சைக்­கிள் ஓட்­டத் தொடங்­கி­ய­வு­டன் ‘அக்­கம் பக்­கம் பார்க்­காதே, ஆளைக் கண்டு மிர­ளாதே, பைய பைய ஒதுங்­காதே, பள்­ளம் பார்த்து போகாதே,’ என்ற பாடலை பாடி­ய­படி செல்­ல­லாமே ஊர்­வ­லம்.

குறிப்பு :

* சைக்­கிள் ஓட்­டு­ப­வர்­கள் எடுத்­த­வு­டன் வெகு­தூ­ரம் பய­ணம் செய்ய வேண்­டாம்.

* தாங்­க­மு­டி­யாத மூட்டு வலி, அதிக உடல் எடை, இத­யக்­கோ­ளாறு போன்ற பிரச்­சினை உள்­ள­வர்­கள் மருத்­துவ ஆலோ­சனை பெற்று சைக்­கிள் ஓட்­ட­வும்.

* வயது மற்­றும் உடல்­நி­லை­யைப் பொறுத்தே, சைக்­கிள் ஓட்­டும் நேர­மும் வேக­மும் அமைய வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!