சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி நாளை மாலை 4.00 மணிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் 'இமேஜினேஷன்' அறையில் நடைபெற
இருக்கிறது.
சிங்கப்பூர் போன்ற நகரத்தில் பெண்களின் உளவியலின் போக்கைப் பல்வேறு கதைச் சூழல்
களாலும் கதை மாந்தர்களினாலும் கட்டவிழ்க்கும் லதாவின் 'சீனலட்சுமி' நூலை அறிமுகம் செய்கிறார் தமிழ் இலக்கிய
ஆர்வலர் திருவாட்டி அனுராதா வெங்கடேஸ்வரன். அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் கலந்துரையாடலும் இடம்பெறும்.
கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். இளையர்
பிரக்தீஷ் பங்கேற்று, நெறிப்படுத்தும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
ஜூலை மாதக் கதைக்களத்தில் பல்வேறு விருதுகளை வென்ற எழுத்தாளர் ஷாநவாஸின் 'மூன்றாவது கை' சிறுகதைத் தொகுப்பின் கலந்துரையாடல் இடம்பெறும். ஆகவே அந்த நூலை வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.
அடுத்த மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள நூல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூல் அறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகளும் காத்திருக்கின்றன.
மூன்று பிரிவுகளாக நடை
பெறும் ஜூலை மாத சிறுகதை எழுதும் போட்டிக்குக் கதை
எழுதுவதற்கான தொடக்க
வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும்.
"எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம்தான் எல்லாத்துக்கும் காரணம் என்பதை இப்போதாவது உணர்ந்தாயா?" என்று கேட்டார் அப்பா.
இளையர் பிரிவு: 300 முதல் 400 வார்த்தைகளுக்குள் சிறு
கதையை எழுத வேண்டும்.
'முதன் முதலாக வேலைக்குச் சென்ற நாளை, இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.'
பொதுப்பிரிவு: 400 முதல் 500 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
கைகளில் சுமந்திருந்த நான்கைந்து பைகளைவிட மனத்தின் பாரம் தாங்க முடியாததாக இருந்தது.
மேற்கண்ட படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 23/06/2023 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும். வெற்றிபெறும் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன!
மேல்விவரங்களுக்கு:
http://singaporetamilwriters.com/kathaikalam/ திருவாட்டி கிருத்திகா, செயலாளர் kiruthikavirku@gmail.com திருவாட்டி பிரேமா மகாலிங்கம் 91696996 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.

