உடலின் சமநிலையைப் பேண, வலிகளும் அசதியும் நீங்கும்

சோர்­வும் வலி­களும் இன்று அதி­க­மானோர் எதிர்­கொள்­ளும் பிரச்சி­னை­கள்.

உட­லில் அல்­லது உட­லின் ஒரு பகு­தி­யில் ஏற்­படும் வலி அன்­றா­டம் ஏற்­படும் ஒரு தொந்­த­ர­வாகப் பல­ருக்­கும் உள்­ளது.

கை வலி, கால் வலி, கழுத்து வலி, தலை வலி, இடுப்பு வலி, தசை வலி, நரம்பு வலி, வயிற்று வலி, முழங்­கால் வலி என்று அடுக்­கிக்­கொண்டே போக­லாம்.

உட­லின் சம­நிலை

உடல் என்­பது பஞ்ச பூதங்­க­ளின் இயக்­கம் என்­பார்­கள். இந்­தப் பஞ்ச பூதங்­க­ளின் சமன்­பாடு குறை­யும்­போது உட­லில் கழிவுகள் தேக்­கம் அடை­யத் தொடங்­கும்.

அன்­றாட வாழ்­வில் உணவு, உழைப்பு, தூக்­கம், சுவா­சம், தண்­ணீர் ஆகி­யவை தொடர்ந்து அதி­க­ரிப்­பதோ அல்­லது குறை­வதோ பஞ்­ச­பூத சமன்­பாடு இல்­லாத நிலை­யா­கும். இந்­தச் சமன்­பாடு சீர்­கேட்­டி­னால் உணவு செரி­மா­ன­மின்மை முதல் தூக்­க­மின்மை, சோர்வு வரை பல தொந்­த­ர­வு­கள் ஏற்­ப­டு­கின்­றன.

வலி என்­பது

அன்­றா­டம் ஏற்­ப­டக்­கூ­டிய உடல் வலியை போக்க, உட­லைச் சம­நி­லைப்­ப­டுத்தும் வித­மாக உடல் தேவைக்­கேற்ப காய்ச்­ச­லாக வெளிப்­ப­டுத்தி போதிய ஓய்வு, எளிய உணவு முறை மூலம் தன்­னைத்­தானே சரி செய்து­கொள்­கிறது. இந்த ஓய்­வை­யும் எளிய உண­வை­யும் கொடுக்­கா­த­போது உட­லின் செயல்­பாடு அதி­க­ரிக்க ஏதா­வது ஓர் உறுப்போ அல்­லது உட­லில் ஒரு பகு­தியோ பல­வீ­ன­மா­கத் தொடங்­கு­கிறது.

இத­னால் ரத்த ஓட்­டம் பாதிக்­கப்­பட, அது உட­லின் பல­வீ­ன­மான பகு­தி­யில் வலி­யாக வெளிப்­படும். இந்தப் பாதிப்பே உடல் வலி­யா­கும். அந்த வலியை முறை­யாக கவ­னிக்­கா­த­போது அது நாள்­பட்ட நோயாக, நிரந்­தர வலி­யாக மாறு­கிறது.

மூட்டு வலிக்கு கார­ணம், மூட்­டு­க­ளைச் சுற்றி உள்ள தசை­நார்­கள் வலு இழப்­ப­தும், மூட்­டு­க­ளுக்கு இடை­யில் உள்ள ச‌வ்வு பகு­தி­யில் நீர்த்­தன்மை குறை­வ­தால் அவை சுருங்கி விரி­யும் தன்­மையை இழந்து இரு எலும்­பு­களும் உறை­வ­தும் ஆகும். இத­னால் வலி ஏற்­ப­டு­கிறது.

எதிர்­கால நோயை ஆரம்­பத்­தி­லேயே அறி­விக்­கும் முன்­ன­றி­விப்பே தொட­ரும் உடல் வலி.

உட­லின் இந்த எச்­ச­ரிக்­கையைப் புரிந்­து­கொள்­ளா­மல் பலர் உட­லில் ஏதோ ஓர் இடத்­தில் வலி ஏற்­பட்­ட­வு­டன் வலி மாத்­தி­ரை­களை எடுத்­துக்­கொள்­கி­றோம்.

வலி மருந்­து­க­ளின் செயல்­பாடு

தலை­யில் பிட்­யூட்­டரி சுரப்­பிக்கு அரு­கில் ஹைப்­போ­தா­ல­மஸ் என்ற ஒரு பகுதி உள்­ளது. இது உட­லில் ஏற்­படும் உணர்­வு­களில் ஒன்­றான வலியை மூளைக்குத் தெரி­விக்­கிறது.

வலி மருந்து இந்த ஹைப்­போ­தா­ல­ம­சின் செயல்­பாட்டை நிறுத்தி, வலி மூளைக்கு எட்­டு­வதை நிறுத்­து­கிறது. ஆக வலி உட­லில் இருக்­கும். வலிக்­கான கார­ணி­களும் உட­லி­லேயே இருக்­கும். ஆனால் வலியை மட்­டும் உண­ர­மாட்­டோம்.

தொடர்ச்­சி­யாக மாத்­திரை உண்­ணும்­போது அதிக கோபம், பயம், கண் எரிச்­சல், தெளி­வற்ற சிந்­தனை, தூக்­க­மின்மை, பசி­யின்மை, இடுப்­பு­வலி, புதிய இடங்­களில் வலி என்று பல புதிய பிரச்­சினை­கள் ஏற்­ப­டு­கின்­றன.

இதற்குக் கார­ணம் உட­லில் உள்ள முக்­கிய‌ உறுப்­பு­க­ளான கல்­லீ­ரல், சிறு­நீ­ர­கத்­தின் செயல்­பா­டு­கள் குறை­யத் தொடங்­கு­வதே ஆகும்.

நிரந்­தர வலி­க­ளைக்

குணப்­ப­டுத்த சில வழிமுறைகள்

 பசி, தூக்­கம், தாகம், உழைப்பு, நல்ல காற்று ஆகி­ய­வற்றை சீராக தேவைக்­கேற்ப விழிப்­போடு கொடுப்­பதே முதல்­நிலை, நீண்ட நாள் வலி­யி­லி­ருந்து விடு­தலை பெற உத­வும்.

 எளி­தில் செரி­மா­னமா­கும் சத்­து­மிக்க தானி­யங்­கள், பழங்­கள், கீரை­கள் உட்­கொள்ள வேண்­டும்.

 அள­வான உடற்­ப­யிற்சி. யோகா மூச்­சுப் பயிற்சி தவ­றா­மல் காலை­யில் பழக்­கப்­ப­டுத்­த­வும்.

 நீண்­ட­நே­ரம் நாற்­கா­லி­யில் உட்காரும்­போது முதுகை நேராக வைத்து உட்­கார வேண்­டும்.

 இறைச்சி, பால் பொருள்களை குறைத்­துக்­கொள்­வது நல்­லது. பூண்டு, இஞ்சி, மஞ்­சள் சேர்த்­துக் கொள்­ள­வும்.

 நீர்ச் சத்­துள்ள (தாது உப்­பு­கள்) காய்­க­றி­க­ளான பூசணி, சுரைக்­காய், வாழைத்­தண்டு ஆகி­ய­வற்றை உண­வில் சேர்த்­துக்­கொள்­ளு­தல் நாள்­பட்ட நோய்­க­ளுக்குச் சிறந்த மருந்­தா­கும்.

மிகுந்த சோர்வு

உட­லில் சம­நிலை குறை­யும்­போதே சோர்­வும் ஏற்­ப­டு­கிறது.

உட­லில் நீர் சரி­யான அள­வில் இல்­லா­விட்­டால், உட­லி­யக்­கம் குறைந்து, மிகுந்த சோர்வு ஏற்­படும். அவ்­வப்­போது தண்­ணீர் குடிக்க வேண்­டும்.

தூக்­க­மின்மை கார­ண­மா­க­வும் சோர்வு ஏற்­படும், உடல் நல­மும் பாதிக்­கப்­படும். அன்­றா­டம் சரி­யான அளவு தூக்­கத்தை மேற்­கொள்­வ­தோடு, ஒரே நேரத்­தில் தூங்கி எழும் பழக்­கத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தும் முக்­கி­யம். இத­னால் நாள் முழு­வ­தும் உட­லின் ஆற்­றல் சீராக இருக்­கும். உடல் சோர்வு நீங்க ஆரம்­பிக்­கும்.

உடல் எடை அள­வுக்கு அதி­க­மாக இருந்­தா­லும் உட­லில் ஆற்­றல் குறை­வாக இருக்­கும். உடல் எடை­யைக் குறைக்க, சரி­யான உணவு, உடற்­ப­யிற்சி மேற்­கொள்­ள­லாம்.

உடல் சோர்வு நீங்க கொஞ்­சம் கொஞ்­ச­மாக பல­முறை சாப்­பி­ட­லாம். மசிறு இடை­வெ­ளி­யில் ஏதே­னும் ஆரோக்­கி­ய­மான உண­வுப் பொருளை சாப்­பி­டும்­போது உட­லில் ரத்த சர்க்­க­ரை­யின் அளவு சீராக இருக்­கும்.

பொது­வாக சோர்வு, முறை­யான உணவு, தூக்­கம், உடற்­ப­யிற்சி மூலம் சரி­யா­கி­வி­டும். ஆனால், மிகுந்த சோர்வு விரை­வில் சரி­யா­காது. இதற்­குச் சரி­யான கார­ணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

மன அழுத்­தம், குடும்­பச் சூழ்­நிலை, செய்­யும் வேலை அல்­லது படிப்­பில் விருப்­ப­மின்மை போன்ற கார­ணங்­க­ளா­லும் இந்த வகை­யான சோர்வு ஏற்­ப­ட­லாம். இது ஆறு மாதங்­க­ளுக்கு மேல் நீடித்­தி­ருக்­க­லாம்.

உடற்­ப­யிற்சி செய்­தா­லும் சோர்வு வரும். காலை எழுந்­த­வு­டன் அச­தி­யாக இருக்­கும். மறதி ஏற்­படும். மன­தின் ஒரு­மு­கத்­தன்மை குறை­யும். குழப்­பம் வரும், மூட்டு வலி வரும் ஆனால் வீங்­காது, சிவக்­காது. சில­ருக்கு தொண்டை வலி, தலை­வலி, வேறு சில­ருக்கு வேறு வலி­கள் ஏற்­படும்.

இத்­த­கைய சோர்­வுக்கு தனி­யான பரி­சோ­த­னை­கள் இல்லை. நீரி­ழிவு, ரத்­தக் கொதிப்பு, தைராய்டு, கொழுப்பு, ரத்த சோகை, கிரு­மித்­தொற்று, இத­யம், சிறு­நீ­ர­கம், மனச் சோக நோய், கட்­டி­கள், வெள்­ளை­ அணுக்­க­ளின் அளவு போன்­ற­வற்­றுக்­கான பரி­சோ­த­னை­களே செய்­யப்­ப­டு­கின்­றன. மூளை சோத­னை­களும் செய்­வ­துண்டு.

மிகை அச­தி­யால் சோர்­வாக இருப்­ப­வர்­கள் மெது­வாக வேலை செய்ய வேண்­டும். வேலை­யை­யும் ஓய்­வை­யும் தூக்­கத்­தை­யும் முறைப்­ப­டுத்­த­வேண்­டும். பெரிய வேலையை சிறிது சிறி­தா­கப் பிரித்­துச் செய்­வ­தற்­குப் பழக வேண்­டும். யோகா, தியா­னம் செய்ய வேண்­டும். ஆழ­மாக மூச்சை இழுத்து வெளி­வி­டு­வது மிக­வும் நல்­லது.

 உலர்ந்த திர்ட்­சைப் பழம், ஆரஞ்­சுச் சாறு, ஒரு வாழைப்­ப­ழம், முத­லி­ய­வற்றை அன்­றாட சாப்­பி­ட­லாம்.

 பேரிச்­சம் பழங்­களை தண்­ணீ­ரில் ஊற வைத்து ஊறிய பழத்தை தண்­ணீ­ரு­டன் சேர்த்து உண்­ண­லாம்.

 ஒரு குவளை அன்­னா­சிப் பழச் சாற்­று­டன் மிள­குத் தூள் சேர்த்து குடிக்கலாம்.

 முருங்­கை­கீ­ரையை காம்­பு­டன் தண்­ணீ­ரில் போட்­டுக் கொதிக்க வைத்­துக் குடிக்க அசதி நீங்­கும்.

 மிளகை நெய்­யில் வறுத்­துத் தூள் செய்து வெல்­லம், நெய் சேர்த்து லேகி­யம் போல் கிளறி 5 கிராம் அளவு அன்­றா­டம் சாப்­பிட சோர்வு குறை­யும்.

 வெங்­கா­யத்தை நெய்­யில் வதக்­கிச் சாப்­பி­ட­லாம்.

 கேரட் சாற்­றில் பத்து  மிளகு, தேன் கலந்து சாப்­பி­ட­லாம்.

 அகத்­திக்­கீ­ரையை வாரம் இரு­முறை உண்­ண­லாம்.

  செங்­க­ரும்­புச் சாறு 100 மி.லிட்­டர், எலு­மிச்­சைச் சாறு 30 மி.லிட்­டர், சீர­கப் பொடி ஆகியவற்றை­ கலந்து காலை­யில் குடிக்­க­லாம்.

 நெல்­லிக்­காய், முருங்­கைக்­காய், முள்­ளங்கி இவை­களை உண­வில் சேர்த்தால் கை, கால் வலி வரா­ம­லி­ருக்­கும்.

 நல்ல எண்­ணெய், விளக்­கெண்ணை, வேப்ப எண்­ணெய் கலந்து வலி இருக்­கும் இடத்­தில் தேய்த்து வர நாள்­பட்ட முட்டு வலி­களும் தசை வலி­களும் குண­மா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!