அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூளையைப் பாதிக்கலாம்

காலை உண­வாக உண்­ணப்­படும் ‘சிரல்ஸ்’, சிற்­றுண்டி ‘பார்’, உறைய வைக்­கப்­பட்ட உண­வு­கள், பொட்­ட­லம் செய்­யப்­பட்ட அனைத்து இனிப்­பு­கள் உள்­ளிட்ட பல பொருள்­கள் நீரி­ழிவு, உடல் பரு­மன், புற்­று­நோய் போன்ற விரும்­பத்­த­காத உடல்­ந­லக் கேடு­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை என்­பது அனைவரும் அறிந்ததே.

ருசி­யான, எப்­போ­தும் வச­தி­யான இந்த உண­வு­கள் மன நலத்திலும் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன என்­பது அண்­மைய ஆய்­வு­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக நியூ­யார்க் டைம்ஸ் வெளி­யிட்­டுள்ள கட்­டுரை தெரி­விக்­கிறது.

ஒரு­வர் எவ்­வ­ளவு பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­களை உண்­ணு­கி­றாரோ, அவ்­வ­ளவு அதி­க­மாக அவர் மனச்­சோர்­வு­ட­னும் கவ­லை­யு­ட­னும் இருப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் என்­பதை கடந்த 10 அல்­லது அதற்கு மேற்­பட்ட ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன.

சில ஆய்­வு­கள் இந்த பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­க­ளுக்­கும் சாப்­பி­டு­வ­தற்­கும் நினை­வாற்­றல், புரிந்­து­கொள்­ளு­தல் போன்ற திறன்­கள் குறை­யும் அபா­யத்­திற்­கும் இடையே தொடர்­புள்­ள­தா­கக் குறிப்­பி­டு­கின்­றன.

பிரே­சி­லிய ஆய்­வா­ளர்­கள் 2009ல் பதப்­ப­டுத்­தப்­ப­டாத உணவு, குறைந்த அளவு பதப்­ப­டுத்­தப்­பட்ட (பழம், காய்­க­றி­கள், அரிசி, மாவு போன்­றவை) உண­வு­கள், பதப்­ப­டுத்­தப்­பட்ட (எண்­ணெய், பட்­டர், சர்க்­கரை, பால் பொருள்­கள், டின்­களில் அடைக்­கப்­பட்ட சில உண­வு­கள்), அதி­க­ளவு பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­கள் என நான்கு வகை­யான உண­வு­களை ஆய்­வு­செய்­த­னர்.

அதி­க­ளவு பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­களில் ரசா­யன சேர்க்­கை­கள், வண்­ணங்­கள், செயற்கை சுவை­கள், இனிப்­பு­கள் போன்ற வீட்­டில் செய்­யப்­படும் உண­வு­களில் அரி­தா­கவே பயன்­ப­டுத்­தப்­படும் பொருள்­கள் சேர்க்­கப்­ப­டு­கின்­றன என்று பிரே­சி­லில் உள்ள சாவ் பாலோ பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உணவு பதப்­ப­டுத்­து­தல் துறை­யின் ஆய்­வா­ளர் யூரி­டைஸ் மார்­டி­னெஸ் ஸ்டீல் கூறி­னார்.

இந்த வகைப்­பாடு முறை இப்­போது ஊட்­டச்­சத்து ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளால் பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

கடை­களில் விற்­கப்­படும் பொட்­ட­ல­மி­டப்­பட்ட உறைந்த உண­வு­களும் துரித உண­வ­கங்­களில் விற்­கப்­படும் பெரும்­பா­லான உண­வு­களும் அதி­க­ளவு பதப்­ப­டுத்­தப்­பட்­டவை.

குடல் நலக்­கேடு மூளையை எவ்­வாறு பாதிக்­க­லாம் என்­ப­தில் பெரும்­பா­லான ஆய்­வு­கள் கவ­னம் செலுத்­தி­யுள்­ளன. அதி­க­ளவு பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­களில் பொது­வாக நார்ச்­சத்து குறை­வாக இருக்­கும். முழு தானி­யங்­கள், பழங்­கள், காய்­க­றி­கள், கொட்­டை­கள், விதை­கள் போன்ற தாவர அடிப்­ப­டை­யி­லான உண­வு­களில் நார்ச்­சத்து நிறைய இருக்­கும்.

நார்ச்­சத்து குட­லில் உள்ள நல்ல பாக்­டீ­ரி­யாக்­க­ளுக்கு உண­வ­ளிக்­கிறது. மூளை­யின் செயல்­பாட்­டில் முக்­கிய பங்கு வகிக்­கும் கொழுப்பு அமி­லங்­க­ளின் உற்­பத்­திக்­கும் நார்ச்­சத்து அவ­சி­யம் என்று ஊட்­டச்­சத்து மன­நல ஆய்­வுக்­கான அனைத்­து­லக சங்­கத்­தின் தலை­வ­ரும் டீக்­கின் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மூத்த ஆய்­வா­ள­ரு­மான டாக்­டர் வொல்ப்­காங் மார்க்ஸ் குறிப்­பிட்­டுள்­ளார்.

பெரும்­பா­லும் விலங்­கு­களில் செய்­யப்­பட்ட ஆய்­வு­கள், மனி­தர்­க­ளி­டம் செய்­ய­பட்ட சில ஆய்­வு­க­ளின்­படி, செயற்கை இனிப்­பு­கள் போன்­றவை குடல் நுண்­ணு­யிரை எதிர்­ம­றை­யாக பாதிக்­க­லாம் என்று கூறு­கின்­றன என்று டாக்­டர் மார்க்ஸ் குறிப்­பிட்­டார்.

ஆரோக்­கி­ய­மற்ற குடல், சர்க்­கரை அதி­கம் உள்ள உணவு கடு­மை­யான அழற்­சிக்கு பங்­க­ளிக்­கக்­கூ­டும். இது பல மன, உடல் பிரச்­சி­னை­க­ளுக்கு இட்­டுச்­செல்­லும் என்று டாக்­டர் லேன் கூறி­னார். “வீக்­கத்­திற்­கும் மூளைக்­கும் இடை­யி­லான தொடர்­பு­கள் மனச்­சோர்­வின் அதி­க­ரிப்­புக்கு வழி­வ­குக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது,” என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!