தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீரிழிவு: அருந்த, தவிர்க்கவேண்டிய பானங்கள்

2 mins read
8e21c669-8892-4421-8461-72952888b348
-

நீரிழிவு நோயா­ளி­கள் கட்­டா­யம் அருந்­த­வேண்­டிய பானங்­க­ளை­யும் அவர்­கள் மறந்­தும் பரு­கக்­கூ­டாத பானங்­கள் குறித்­தும் ஊட­கங்­கள் தக­வல்­க­ளைப் பகிர்ந்­துள்­ளன.

நீரிழிவு நோயா­ளி­கள் தயக்கமின்றி அருந்தக்கூடிய பானம் என்­றால் தண்­ணீர்­தான். இதை நாள் முழு­வ­தும்கூட அருந்­த­லாம். இத­னால் அவர்­களது சர்க்­கரை அளவு உய­ரவோ அல்­லது குறை­யவோ செய்­யாது.

நாள் முழு­வ­தும் தண்­ணீர் குடித்து உடலை நீரேற்­ற­மாக வைத்­தி­ருப்­பது ரத்­தத்­தில் சர்க்­க­ரை­யின் அளவை சீராக வைத்­தி­ருக்க உத­வு­கிறது.

உங்­க­ளு­டைய உடல் போது­மான நீர்ச்­சத்­து­டன் உள்ளதா என்­பதை சிறு­நீ­ரின் நிறத்தின் வழி தெரிந்துகொள்ளலாம். வெளிர்­மஞ்­சள் நிறத்­தில் சிறு­நீர் வெளி­யே­றி­னால் உடல் நீரேற்­ற­மாக இருப்பதாக அர்த்­தம்.

'த டைம்ஸ் ஆஃப் இந்­தியா' ஊடகத் தக­வல், "இனிப்­பில்­லாத இள­நீ­ரி­லும் சர்க்­கரை உள்­ளது என்­றா­லும் சர்க்­கரை பானங்­களை­விட இளநீர் சிறந்­தது. இது ரத்­தச் சர்க்­கரை அள­வைக் குறைக்­கும். எனி­னும் நாள் ஒன்­றுக்கு ஒன்று அல்லது இரண்டு குவளை (240-480 மில்லி) வரை மட்டுமே எடுத்­துக்­கொள்­ள­லாம்.

"அதே­போல், பார்லி கரை­யாத நார்ச்­சத்தை அதி­கம் கொண்­டுள்­ளது. இது நீரி­ழிவு நோயா­ளி­களுக்கு ஆரோக்­கி­ய­மான தேர்வு என்று சொல்­ல­லாம். ரத்­தத்­தில் உள்ள குளுக்­கோஸ் அளவை பரா­ம­ரிப்பதற்கு உதவும். அத்துடன், கொழுப்பு, ரத்தச் சர்க்­க­ரையையும் குறைக்­கிறது," எனக் குறிப்­பிட்­டுள்­ளது.

நீரிழிவு நோயா­ளி­கள் பசும்­பால் அருந்­த­லாம். இதில் புர­தச்­சத்­தும் கேல்­சி­ய­மும் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும். ஆனால், ஒரு­சில மருத்­து­வர்­களின் பரிந்­து­ரை­யின்­படி, நீரி­ழிவு நோயா­ளி­கள் பாலை நேர­டி­யாக அருந்­தா­மல் சிறி­த­ளவு தேயிலை அல்­லது காபித்தூள் கலந்து சர்க்­கரை இல்­லா­மல் அருந்­து­வது நல்­லது.

'கிரீன் டீ' யும் 'டைப் 2' நீரி­ழிவு அபா­யத்தைக் குறைப்பதாக ஆய்­வு­கள் சொல்­கின்­றன.

நீரி­ழிவு நோயா­ளி­கள் சோடா உள்­ளிட்ட மென்­பா­னங்­களை அடிக்­கடி குடிப்­பது பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தால் செயற்கை பானங்­களைக் குடிக்­கா­மல் தவிர்ப்பதே நல்­லது.

பழச்­சா­று­கள் ரத்­தத்­தில் சர்க்­கரை அளவை வேக­மாக அதி­க­ரிக்கக் கூடிய வாய்ப்பு உள்­ளது. அவற்­றுக்­குப் பதி­லாக தக்­கா­ளிச் சாறு அருந்­த­லாம்.

அடிக்­கடி தண்­ணீர் குடிப்­பதற்கு சலிப்பாக இருந்தால், தக்­கா­ளிச் சாறு நீரேற்­றத்­திற்கு உத­வும். இதில் சிறி­த­ளவு உப்பு சேர்த்து குடிக்கவேண்­டும். ஒரு நாளில் ஒன்­றரை குவளை தக்­காளிச் சாறு அருந்­து­வ­தால் பல்­வேறு சத்­து­கள் கிடைக்­கின்­றன.

பழங்­களைச் சாறாக அருந்து வதைவிட நேர­டி­யாக உண்­பது நல்­லது. அவற்­றை­யும் அள­வோடு உண்­பது சிறந்­தது.

இதுகுறித்து மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.